முடக்கத்தில் நடுத்தரம்
+++++++
Mohamed Nizous
முடக்கம் வந்தால்
கிடைக்கும் உதவியில்
எடுக்கும் கூட்டம்
ஏதோ வாழும்
செல்வக் கூட்டமும்
சிரமங்கள் இன்றி
உள்ளிருந்து கொள்ளும்
உள்ளதால் வாழும்
எனினும் அவதியில்
இடைத்தரம் மாட்டும்
தானாய்ப் போராடும்
தன் கஷ்டம் மறைக்கும்
நடுத்தர வர்க்கம்
நலிந்து போனாலும்
நடுத்தெரு வராது
அடுத்தவர் அறியார்
பொல்லாத கெளரவம்
பொல்லோடு நிற்க
சொல்லாது மறைப்பார்
சோறுமில்லா நிலையை
பார்ப்பவர் நினைப்பார்
பக்கா வாழ்வென
யார்க்கும் இவர் நிலை
இலகுவில் புரியாது
அன்றாடம் உழைத்து
அதில் வரும் லாபத்தில்
நன்றாக வாழ்ந்தவர்
நாதியின்றி நிற்பார்
ஆறேழு நாட்கள்
அப்படி இப்படி
போராடி சமாளிப்பார்
ஊரார் அறியார்
ஆனால் தொடர்ந்து
அதே நிலை இருந்தால்
தான் பசி இருப்பார்
தன் பிள்ளை வயிறார
இவர்களை அறிந்து
இரகசியமாய் உதவல்
சுவர்க்கத்தை தரும்
கவனத்தில் கொள்வோம்
0 comments :
Post a Comment