இலங்கை கவிஞர் இ,முருகையன் உரையரங்கு



ளரி பன்னாட்டுக் கவிஞர் பெருமன்றம் இலங்கை கிளையும், பண்டதரிப்பு மறுமலர்ச்சி மன்றமும் இணைந்து நடாத்திய, வளரி கவிதை இதழின் 13 ஆம் ஆண்டில் மூன்றாம் நிகழ்வாக ஈழத்துக் கவிஞர் இ. முருகையன் குறித்த உரை அரங்கம் கடந்த ஆகஸ்ட் 21 சனிக்கிழமை இலங்கை நேரம் முன்னிரவு 07.00 மணிக்கு, வளரியின் முதன்மை ஆலோசகர் மேமன்கவி தலைமையில் கூகுள் மீட் யில் நடைபெற்றது.

வளரி பன்னாட்டுக் கவிஞர் பெருமன்ற இலங்கைக் கிளையின் வடக்கு மாகாண ஒருங்கிணைப்பாளர், மாதவி உமாசுதசர்மா வரவேற்புரை ஆற்ற, வளரி பொறுப்பாசிரியர் கவிஞர் அழ. பகீரதனின் தொடக்க உரையை முன்வைத்தார்.

நோக்கவுரை வளரி சஞ்சிகை ஆசிரியர் அருணாசுந்தரராசன் ஆற்றினார்.

இலங்கை தேசிய கலை இலக்கியப் பேரவையை சேர்ந்த வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்கள், வளரி பன்னாட்டுக் கவிஞர் பெருமன்ற இலங்கைக் கிளையின் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர், கவிஞர் க. யோகானந்தன், மத்திய மாகாண ஒருங்கிணைப்பாளர் கவிஞர் சுபாஷினி, நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவிஞர் புனித பிரியா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற, இவ்வுரை அரங்கில் முருகையனின் கவிதை முகம்' என்ற தலைப்பில் இலங்கை தேசிய கலை இலக்கியப் பேரவையின் வழக்கறிஞர் தேவராஜா சிறப்புரையாற்றினார். பண்டதரிப்பு மறுமலர்ச்சி மன்றத்தை சேர்ந்த ச.தனுஜனின் நன்றியுரையுடன் உரையரங்கம் நிறைவு பெற்றது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :