தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைவாக, அரசாங்க உத்தியோகத்தர்களின் விளையாட்டுதிறனையும், உடற்பயிற்சித் திறனையும் விருத்திசெய்யும் வகையில் 15 நிமிடம் உடற்பயிற்சி செய்யும் நிகழ்வு கிழக்கு மாகாண முதலமைச்சு வளாகத்தில் இடம்பெற்றது.
முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வு விளையாட்டு ஆசிரியர் ஜே.சுவாசினியின் வழிகாட்டலில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
1948 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ம் திகதி நடைபெற்ற ஒலும்பிக் போட்டியில் இலங்கையை பிரதிநிதிப்படுத்தி 400 மீற்றர் சட்ட வேலியோட்டம் போட்டியில் பங்கு பற்றி வெள்ளிப் பதக்கத்தை எமது நாட்டுக்கு பெற்றுத்தந்த டங்கன் வைட் அவர்களை கௌரவப்படுத்தும் முகமாக ஜூலை 31 தேசிய விளையாட்டு தினமாக அறிமுகப்படுத்தப்பட்டு இந்நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் ஆளுநர் செலயலகம், முதலமைச்சு, சுகாதார அமைச்சு, மாகாண ஆயுர்வேத திணைக்களம், மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம், உள்ளிட்ட பல மாகாண திணைக்களங்களின் உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment