கொவிட் 19 தொற்றுக்கு இலக்கான முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, இம்மாதம் 13ம் திகதி கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிலிவ் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (24) காலை காலமானார்.
இலங்கையில் நீதிக்காக ஓங்கி ஒலித்த குரல் மாத்திரமின்றி, இன, மதம், ஜாதி பேதங்களை மறந்து இலங்கையர்கள் அனைவரையும் ஒன்றினைக்க பாடுபட்ட அமரர் மங்கள சமரவீரவின் இந்த இழப்பு எமக்கு மாத்திமின்றி, முழு நாட்டுக்கும் பாரிய இழப்பாகும்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் நெருங்கிய நண்பராகன மங்கள சமரவீர, 1983 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை அமைப்பாளராக அரசியலில் பிரவேசித்ததுடன், 1989ம் ஆண்டு மாத்தறை மாவட்டத்திலிருந்து முதற் தடவையாக பாராளுமன்றம் சென்றார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசில் நிதி அமைச்சராகவும், வெளி விவகார அமைச்சராகவும் பதவி வகித்த அவர் 2019 ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தலைமையில் புதிதாக உருவாக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டார்.
இந்த நிலையில், அவர் இறுதியாக நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியில் இருந்து வாபஸ் பெற்று, அரசியலில் இருந்து சற்று ஒதுங்கி இருக்கப் போவதாக அறிவித்திருந்தார்.
நேரடியாகவும், மறைமுகமாகவும் இருந்து இலங்கை அரசியலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்திய அமரர் மங்கள சமரவீர, இலங்கையில் தலைதூக்கியிருந்த இனவாதத்துக்கு எதிராக மிகவும் தைரியத்துடன் குரல் எழுப்பியிருந்தார். சிறுபான்மை அரசியல் தலைவர்களுடன் மிகவும் நெருக்கமான உறவைப் பேணிவந்த இவர், நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களின் சமூக, சமய, உரிமை, அபிவிருத்தி, நலன்கள் உள்ளிட்ட விடயத்தில் கரிசனையுடன் செயற்பட்டார்.
இலங்கையில் மாத்திரமின்றி, சர்வதேச ரீதியிலும் அரசியல், ஆன்மீகத் தலைவர்களுடனும், பொருளாதார வல்லுநர்களுடனும் நல்லுறவைப் பேணிவந்த இவர், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு தனது முழுமையான பங்களிப்பையும் பெற்றுக்கொடுத்திருந்தார்.
இலங்கை வாழ் மூவின சமூகங்கள் மத்தியில் சமய, சமூக மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த தனது இறுதி மூச்சுவரை அரும்பாடுபட்ட அமரர் மங்கள சமரவீரவின் இந்த இழப்பு இலங்கை தேசத்திற்கே ஈடு செய்ய முடியாத பாரிய இழப்பாகும்.
ரஸீன் ரஸ்மின்
செயலாளர்
புத்தளம் மாவட்ட ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியம்.
0 comments :
Post a Comment