அக்கரைப்பற்று பிரதேச உள்ளக அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பிராந்திய பொதுப்போக்குவரத்து வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் எண்ணக்கருவில் உருவாகும் மீனோடைக்கட்டு-அக்கரைப்பற்று மாற்று வழி கார்பட் வீதி நிர்மாணம் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் (31) தேசிய காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் வழிநடத்தலில், அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகியின் தலைமையில் அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் எம்.ஐ.அஹமத் சஜீர், அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபி, அக்கரைப்பற்று மாநகர செயலாளர் ஏ. எம்.ஹபீபுர் ரஹ்மான், மாநகர பொறியியலாளர் எம்.ஜே.ஆகில் அஹமத், மாநகர சபை உத்தியோகத்தர்கள் மற்றும் , பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜே.எம்.வஃஸீர் உள்ளிட்ட பிரதேச முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.
குறித்த கலந்துரையாடலில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேலைத் திட்டங்களின் தற்போதைய நிலை, மற்றும் புதிதாக ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள வேலைகள் போன்ற பல விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment