கிண்ணியா கல்வி வலய அதிகாரிகள் பற்றாக்குறையை நிவர்த்திக்க இம்ரான் எம்.பி கோரிக்கை



சில்மியா யூசுப்-
திருகோணமலை மாவட்ட கிண்ணியா கல்வி வலயத்தில் நிலவும் இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர் பற்றாக்குறை காணப்படுவதனால் இதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சுச் செயலாளரை நேரில் சந்தித்து கோரிக்கையை விடுத்துள்ளார்.
அதன்படி கல்வி அமைச்சு செயலாளர் எம்.சீ.எல். பெர்னாண்டோவுக்கு அவர் கையளித்துள்ள கோரிக்கைக் கடித்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

கிண்ணியா கல்வி வலயத்தில் கடமை புரிந்த கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் இருவர் பதில் உத்தியோகத்தர் இன்றி சமீப காலங்களில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இங்கு நிர்வாக நடைமுறைகள மேற்கொள்வதில் சிரமங்கள் இருப்பதாக ஐக்கிய கல்வி ஊழியர் சங்கம் எனது கவனத்துக்கு கொண்டு வந்துள்ளது.
66 பாடசாலைகளையும், சுமார் 1300 ஆசிரியர்களையும் கொண்ட இவ்வலயத்தில் தற்போது வலயக் கல்விப் பணிப்பாளர் உட்பட 3 கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் மட்டுமே கடமை புரிகின்றனர். 10 க்கு மேற்பட்ட கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் வெற்றிடம் இங்கு உள்ளதாக அறிய முடிகின்றது.
இந்நிலையில் கல்வி நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்கள் இங்கு எதிர் நோக்கப்பட்டு வருகின்றன. எனவே, இதனைக் கவனத்தில் கொண்டு இங்கு நிலவும் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் வெற்றிடங்களை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் பற்றாக்குறை பெருமளவு நிலவுவதாகவும், எனினும் முடியுமானவரை இவ்விடயத்தைக் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுப்பதாகவும் இதன் போது செயலாளர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :