மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில், மாகாண எல்லைகளில் பொலிஸாருக்கு மேலதிகமாக முப்படையினரும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
பொலிஸாரின் ஒத்துழைப்புக்கு முப்படையினர் தேவை என கருதப்படும் இடங்களில் முப்படையினர் நேற்று முதல் கடமைகளில் ஈடுபடுத்தப்படுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
நாட்டில் காணப்படும் கொரோனா நிலைமைக்கு மத்தியில், மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு மீண்டும் கடுமையாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய செயற்படுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
தற்போதைய சூழ்நிலையில் பயணத்தடைக்கு அப்பாற்பட்ட தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நாட்டில் பயணத்தடையை அமுல்படுத்துவதா அல்லது வேறு என்ன நடவடிக்கையை அமுல்செய்வது பற்றி இன்று வெள்ளிக்கிழமை நடைபெறும் கோவிட் ஒழிப்பு பற்றிய கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
0 comments :
Post a Comment