பிரதமர் மகிந்த மருத்துவமனையில் அனுமதி? வெளிவந்த உண்மைத் தகவல்.

பி
ரதமர் மஹிந்த ராஜபக்ச, சுகவீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என பிரதமர் அலுவலக பணிக்குழாம் பிரதானியும் மகிந்தவின் மகனுமான யோஷித்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பிரதமர், சிறந்த உடல்நலத்துடன், தனது பணிகளை வழமை போன்று செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே இவ்வாறான வதந்திகளை தேவையற்றவகையில் பரப்ப வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வௌியாகும் தகவல்கள் உண்மை இல்லை என பிரதமரின் செயலாளர் காமினி செனரத் லங்கா தெரிவித்தார்.

பிரதமர் இன்று காலை இடம்பெற்ற கொரோனா ஒழிப்பு ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் கலந்து கொண்டதுடன் பகல் உணவும் உட்கொண்டதாக காமினி செனரத் கூறினார்.

அதன்படி பிரதமர் நலமுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :