வெளிநாடு செல்வோர் Smart Vaccination Certificate எவ்வாறு பெறுவது



கொவிட் 19 தடுப்பூசி ஏற்றப்பட்டதை உறுதிப்படுத்தும் ஸ்மார்ட் தடுப்பூசி (Smart Vaccination Certificate) இலத்திரனியல் சான்றிதல் அட்டையைப் விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை, இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

சுகாதார அமைச்சும் உலக சுகாதார அமைப்பும் (இலங்கை) இணைந்து கொவிட் -19 ஸ்மார்ட் தடுப்பூசி சான்றிதழ் இலத்திரனியல் அட்டையை அறிமுகப்படுத்துவதாக இலங்கை தகவல் தொடர்பாடல்தொழில்நுட்ப முகவர் நிறுவனம் ICTA நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த சான்றிதழ் தற்போது வெளிநாடு செல்பவர்களுக்கு மாத்திரமே வழங்கப்படுகின்றது.

மேலும், தடுப்பூசி வழங்கப்பட்டதற்கான பதிவு செய்த அட்டையை தவறவிட்டவர்கள் யாராயினும் இருப்பார்களாயின், அவ்வாறானோர் தாம் வசிக்கும் பகுதியின் பொது சுகாதார பரிசோதகருடன் தொடர்புகொண்டு தேவையான தகவல்களைப் பெற்று கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இதற்கமைய , https://covid-19.health.gov.lk/certificate/ இணைய தளத்தில் பிரவேசித்து விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அந்த சான்றிதழைப் பெற்றுக்கொள்ளமுடியும்.

இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்கள் மாத்திரமே இந்த Smart Vaccination Certificate அட்டையை பெற்றுக்கொள்ள முடியும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :