'சி.வி : மலையகத்தின் ஒளிரும் மூர்த்திகரம்'
-107 வது பிறந்த தின நினைவேந்தலும் நினைவுப்பேருரையும்-
மக்கள் கவிமணி சி. வி. வேலுப்பிள்ளையின் 107 வது பிறந்த தினத்தை நினைவுகூரும் வகையில் செப்டெம்பர் 14 ம் திகதி'நினைவுப் பேருரை' ஆற்றும் நிகழ்வு இணைய வழியில் இடம்பெறவுள்ளது.
சாகித்ய ரத்ன தெளிவத்தை ஜோசப் தலைமையில் இடம்பெறும் இந்த நிகழ்வில் 'சி.வி: மலையகத்தின் ஒளிரும் மூர்த்திகரம் ' எனும் தலைப்பில் இலக்கிய ஆய்வாளர் மு.நித்தியானந்தன் நினைவேந்தல் உரையாற்றவுள்ளார்.
பதுளை, மடுல்சீமையைச் சேர்ந்த இளம் ஆய்வாளர் புளோரிடா சிமியோன், 'மலையக வாழ்வியலில் பெண்கள், சிறுவர்களின் வகிபாகமும், அவர்கள் எதிர்நோக்கும் சவால்களும்' எனும் தலைப்பில் நினைவுப் பேருரை ஆற்றவுள்ளார்.
நினைவுப்பேருரை குறித்த கருத்துரையை மலையகக் கல்வியாளர் எம். வாமதேவன் வழங்க உள்ளார்.
நிகழ்ச்சிகளை ஒருங்கமைக்கும் பாக்யா பதிப்பகம் சார்பில் அதன் நிறுவுனர் மல்லியப்புசந்தி திலகர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தவுள்ளார்.
உரைகளைத் தொடர்ந்து உரையாடல்களும் இடம்பெறும். இன்று ( செப் 14) இலங்கை மாலை 7 மணிக்கு zoom செயலி ஊடாக இடம்பெறும் இந்த நிகழ்வின் நுழைவு விபரம்
Meeting ID: 815 9882 3709 Passcode: 495887 என்பதாகும்.
0 comments :
Post a Comment