கொரோனாவிற்கென 24மணிநேர இலவச வாகன சேவை! மாத்தளை மாநகரசபை முன்மாதிரி:மேயர் பிரகாஸூக்கு பாராட்டு!



வி.ரி.சகாதேவராஜா-
கொரோனாத் தொற்றாளர்களை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்வதற்கென மாத்தளை மாநகரசபை இலவசமாக அம்புலன்ஸ் சேவை ஒன்றை ஆரம்பித்திருக்கின்றது.

மாத்தளை மாநகரசபை மேயர் சந்தனம் பிரகாஷ் மேற்கொண்டு துரித முயற்சி காரணமாக டொல்பின் வானொன்றை அம்புலன்ஸாக வடிவமைத்து இச்சேவையை 24 மணிநேரமும் நடத்தி வருகிறது.

இது தொடர்பில் மேயர் சந்தனம் பிரகாஷிடம் கேட்டபோது :

மாத்தளை மாநகர எல்லைக்குள் கொவிட் 19 தொற்றுக்குள்ளான தொற்றாளர்களை அவசர நிலைமைகளின் போது சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்து செல்வதற்கு வாகன வசதியின்மையால் அசௌகரியத்துக்கு உள்ளாகிவந்தனர்.

இதற்க தீர்வுகாணுமுகமாக எமது சபையினால் இவ்விலவச வாகனசேவையை ஏற்படுத்தியுள்ளோம். இதற்கென ஆளணியினரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனை கருத்திற் கொண்டு ,இவர்களுக்காக உதவி கரம்
நீட்டுவதற்காக 24 மணித்தியால இலவச வாகன சேவையை வழங்குவதற்கு கடந்த 24ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அவசர தேவைக்கு (Hotline) 0710227227 க்கு தொடர்பு கொள்ளலாமென மேயர் சந்தனம் பிரகாஷ் தெரிவித்தார்.


இச்சேவையையிட்டு மக்கள் மிகுந்த பாராட்டைத் தெரிவித்துவருகின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :