ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் ,எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச நேற்று பொத்துவில் அரச வைத்தியசாலைக்கு 30லட்சருபா பெறுமதியான மருத்துவ உபகரணங்களை வழங்கிவைத்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களுக்கான இணைப்பாளர் வெள்ளையன் வினோகாந்தின் வேண்டுகோளுக்கமைவாக இம்மருத்துவ உபகரணத் தொகுதி அங்கு வழங்கிவைக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் 'விபக்சயே உஸ்மக் '(எதிர்க்கட்சியின் சுவாசம்)எனும் திட்டத்தின் பெயரில் ஆரோக்கியமான நாட்டினை கட்டியெழுப்பும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இது வழங்கிவைக்கப்பட்டது.
பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு 30,25000.00 (30 லட்சத்து 25000 ரூபாய்) பெறுமதியான அத்தியாவசிய வைத்திய சேவைக்கான உபகரணங்கள் குறிப்பாக ஐ சி யு வைத்திய உபகரண சாதனங்களை வைத்தியசாலை வைத்தியஅத்தியட்சகர் வைத்தியர் மொகமட் ரியாஸ்சிடம் ஐக்கிய மக்கள் சக்தியினுடைய தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச வழங்கி வைத்தார்.
இது அத்திட்டத்தின் கீழ் இருபத்தி எட்டாவது வைத்தியசாலை ஆகும்.
இதற்குமுன் , நேற்றைய தினத்தில் பானம வைத்தியசாலைக்கு இருபத்தி ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான வைத்திய உபகரணங்கள் வழங்கப்பட்டது. என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment