33வருட கல்விச்சேவையிலிருந்து இஸ்மாயில் ஓய்வு!



வி.ரி.சகாதேவராஜா-
ம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையின் விவசாயபாட ஆசிரியஆலோசகரான பி.இஸ்மாயில், தனது 33வருட கல்விச்சேவையிலிருந்து நாளை(24) ஓய்வுபெறுகிறார்.

சம்மாந்துறையைச்சேர்ந்த இஸ்மாயில் 17வருடங்கள் ஆசிரியசேவையிலும், 15வருடங்கள் ஆசிரியஆலோசகராகவும் சேவையாற்றியிருந்தார்.

இவர் தனது ஆரம்ப இடைநிலைக்கல்வியை சம்மாந்தறை அல்மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியிலும் ,உயர்கல்வியை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாவிதியாலயத்திலும், பூர்த்தி செய்து விவசாய டிப்ளோமாப்பயிற்சியை அம்பாறை ஹார்டி உயர்தொழினுட்பக்கல்லூரியில் பூர்த்தி செய்தவராவார்.

இவர் சாளம்கைப்கேணி அஸ்ஸிராஜ் மகாவித்தியாலயம், அல்மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி ,தாருஸ்ஸலாம் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் 17வருடகாலம் கற்பித்தல் பணியில் ஈடுபட்டு பாரிய வரவேற்பைப்பெற்றவராவார்.

ஜனாப் இஸ்மாயில் சம்மாந்துறையைச்சேர்ந்த அலியார் பைக்கீர்தம்பி ,இஸ்மாலெவ்வை பாத்துமா தம்பதிகளின் புதல்வராவார்.

விவசாயபாட ஆசிரியஆலோசகரான பி.இஸ்மாயிலின் ஓய்வையொட்டி, வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீம் பணிமனைசார்பில் அவரது அர்ப்பணிப்பான தன்னலமற்ற ஆத்மார்த்தமான சேவையைப்பாராட்டி வாழ்த்தியுள்ளார்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :