வெளிவந்த 2020 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சை முடிவுகளின் படி தி/கிண்ணியா மத்திய கல்லூரியில் 7 மாணவர்கள் 9 ஏ சித்திகளையும், ஐந்து மாணவர்கள் 8 ஏ சித்திகளையும் பெற்று சாதனை படைத்துள்ளதாக அதன் அதிபர் எஸ்.எம். எம் .அனிபா தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது 155 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி 114 பேர் உயர் தரம் கற்க தகுதி பெற்றுள்ளதாகவும், கடந்த ஆண்டை விட இம்முறை 21 சதவீதம் பரீட்சை பெறுபேறு அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார் .
இப் பரீட்சையில் என்.ஹாதிம் அஹமட்,ஏ.கே.அன்சிர் அஹம்ட்,ஏ.தஹ்சின் ராசா, எம் .என் .எம் அம்மார் அஹமட்,எம் .ஆர் .ஹிக்மத் ஹாபி,என்.எம்.சிமார், என்.நுசைப் அஹமட் ஆகிய மாணவர்கள் 9 ஏ சித்திகளையும், எம்.கே.எம்.ஆசிர், எம்.என்.எம்.அப்லாக்,எம்.ஆர்.எம்.அல் முன்தன்சிர், என்ஜசான், ஜே.கே.சராபி அஸீஸ் ஆகிய மாணவர்கள் 8 ஏ சித்திகளையும் பெற்றுள்ளதாகவும் கூறினார்.
கடந்த ஆண்டை விட இம்முறை ஏ சித்திகளைப் பெற்ற மாணவர்கள் அதிகரித்துள்ளதாகவும், எல்லாப் பாடங்களிலும் மாணவர்கள் சித்தி பெற்ற வீதம் அதிகரித்துள்ளதாகவும் இதன் போது அதிபர் தெரிவித்தார்
கொவிட் தாக்கம் மற்றும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அவர்களின் பெறுபேறுகள் அதிகரிப்பதற்கு காரணமாக இருந்த ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவிப்பதோடு, எதிர்வரும் பரீட்சையில் இதைவிட சிறந்த பெறுபேறுகள் பெற வேண்டும் என்றும், இன்றைய மாணவர்கள் சிறப்பாக கற்று எதிர்காலத்தில் சிறந்த பிரஜைகளாக உருவாக வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment