அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த 9 வெவ்வேறு வர்த்தமானிகள் வெளியிடப்பட்டுள்ளன.-புத்திக பத்திரண



நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண இன்று (30) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கள்.

இன்று வர்த்தக அமைச்சின் பல துறைகளில் பல நெருக்கடிகள் எழுந்துள்ளன மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த 9 வெவ்வேறு வர்த்தமானிகள் வெளியிடப்பட்டுள்ளன. 9 ஆவது வர்த்தமானியும் வரப்போகிறது.

நாட்டில் தற்போது ஊரடங்கு சட்டம் உள்ளது என்பதை நாங்கள் அறிவோம். நாடு நாளை மீண்டும் திறக்கப்படும். திறப்பதற்கு ஒன்றுப் இல்லை.சகலதும் திறந்தே உள்ளன.வழமை போன்ற வாகன நெரிசல் வீதிகளில் உள்ளது.அரசாங்கம் வேண்டுமென்றே ஊரடங்கு உத்தரவை நகைச்சுவையாக மாற்றியது அல்லது அரசாங்கத்தால் ஊரடங்கு உத்தரவை சரியாக நிர்வகிக்க முடியவில்லை.

தற்போதைய ஜனாதிபதி நவம்பர் 18, 2019 அன்று காலை 11.50 மணிக்கு பிரதம நீதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டு என்ன சொன்னார் என்பதை உங்கள் கவனத்திற்கு ஈர்க்க விரும்புகிறேன். அவர், "நான் இந்த நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதி நான்,நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்த நான் ஒரு போதும் பின்நிற்கப்போவதில்லை.நான் எனது நாட்டை நேசிக்கின்றேன்,நான் எனது நாடு குறித்து பெருமைப்படுகிறேன்.எனது நாடு குறித்து எனக்கு ஒரு இலக்கு இருக்கிறது என்று கூறினார். ஜனாதிபதியின் இந்த அதிகாரத்தில் ஊரடங்கு சட்டத்தைப் பிரப்பித்ததைப் பார்த்தோம்.போராட்டங்களின் இரகசிய பொலிஸார் செல்கின்றனர்,ஊடக அச்சுறுத்தல்களுக்காக ஊடகவியலாளர்கள் சிஐடி க்கு அழைக்கப்படுவதெல்லாம் இந்த அதிகாரத்தாலேயாகும்.ஜனாதிபதியின் அதிகாரங்கள் இதற்காக சிறப்பாக பயன்படுத்தப்படுகிறது.அவர்களின் அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்காக அனுப்பப்பட்டதை நாங்கள் பார்த்திருக்கிறோம்,ஆனால் இன்று நாட்டில் அரிசிப் பிரச்சிணையின் போது திரு.டட்லி சிறிசேன முன்வந்து அரிசி குறித்து உரையாற்றுகிறார்.திரைப்பட காட்சி போன்று உள்ளது.டட்லி சிரிசேனவிற்கு வர்த்தக அமைச்சு அல்லது வர்த்தக தூதுவர் பதவி வழங்கப்பட்டால் சிறந்தது.இவற்றிலிருந்து ஒன்று மட்டும் நன்றாகப் புலப்படுகிறது அதுதான் அவசகர கால நிலையே வேறு ஏதேனுமோ பிரப்பித்தாலும் அரசாங்கத்தின் நிர்வாக இயலாமையையே காட்டுகிறது.
இரண்டாவது நாடக வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் முன்னாள் பனிப்பாளர் துஷான் குணவர்தன நடத்திய நேர்காணலாகும்,இது சர்ச்சைக்குரியது.நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்த தான் ஒரு போதும் பின்நிற்கப்போவதில்லை என்றால், நாட்டை உன்மையாக நேசிப்பதாக இருந்தால்,தனது நாடு குறித்து பெருமைப்படுவதாக இருந்தால்,தனது நாடு குறித்து தனக்கு ஒரு இலக்கு இருக்குமாக இருந்தால் ஜனாதிபதி நாடு திரும்பும் வரும் வரை காத்திருக்கிறோம்.

அவர் இலங்கை வரும் வரை நாங்கள் காத்திருக்கிறோம். நுகர்வோர் விவகார அதிகாரசபையில் ஊழல் இடம் பெற்றுள்ளன. பனிப்பாளர் தான் ஒரு பனிப்பாளர் அல்ல என்று கூறுகிறார், வர்த்தக அமைச்சரின் தலையீடுகள் இடம் பெற்றதாக கூறுகிறார்.இவற்றுக்கு ஜனாதிபதியின் பதில்கள் எவ்வாறு வழங்கப்படும் என்று முன்னால் வர்த்தகத் துறை இராஜாங்க அமைச்சராக,சதோசவிற்கு பொறுப்பாக இருந்த ஓர் அமைச்சராக நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறோம்.

மாத்தறை சுகபோக பூட்சிடியில் இடம் பெற்றவை வலையொளிகளில் உள்ளன.நான் அங்கு சென்று நிபந்தனையின்றி பரிசோதத்தேன். இன்று சிசிடிவி பதிவுக் காட்சிகளை வேண்டுமென்றே அழித்துவிட்டனர்.இது தொடர்பாக நீதித்துறை நடவடிக்கை எடுத்திருந்தால் குற்றவாளிகளை,உடைத்தவர்களை கண்டுபிடித்திருக்க முடியும். சதொசவில் உயர் அதிகாரி தொடக்கம் சாதாரண அதிகாரி வரை துஷ்பிரயோகவாதிகளால் நிரம்பியுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பனிப்பாளர் துஷான் குணவர்த்தன ஜனாதிபதி வரும் வரை காத்திருக்கிறார். கோப்புகள் களனி ஆற்றில் விழுமோ அல்லது களு ஆற்றில் விழுமோ என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். ஆனால் நாங்கள் காத்திருக்கிறோம், ஜனாதிபதி தனது நாட்டிற்கு ஒரு தொலைநோக்கு பார்வை உள்ளவர்.இந்த ஊழலுக்கு எவ்வாறு விசாரணைகளை முன்னெடுப்பார் என்று பார்த்துக் கொண்டிருக்கிறோம்.அதை ஒரு குழுவால் மூடி மறைக்கவும் முடியும், எனவே அது தொடர்பாக நாங்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறோம்.

ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்பு வெறும் பௌதீக பயங்கரவாத பாதுகாப்புடன் மட்டும் சுருங்கிய ஒன்றல்ல. ஆனால் ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு இரண்டு முக்கிய அம்சங்கள் உள்ளன.எரிசக்தி ஆற்றலை ஒரு கணம் கருத்தில் கொள்ள வேண்டும். எரிசக்தி தொடர்பாக நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய முக்கியமான காரணியாக உள்ளது.கல் யுகத்திற்கு எங்களால் பயணிக்க முடியாது.

இலங்கையில் எரிசக்தி தொடர்பான எதிர்கால முடிவுகளை மற்றொரு நிறுவனத்திற்கு,அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க அரசாங்கம் வெட்கமின்றி செயல்படுகிறது.எல்என்ஜி மின் உற்பத்தி நிலையங்களின் சகல உற்ப்பத்தி,பாதுகாப்பு,களஞ்சியம் மற்றும் விநியோகம் என்ற சகலதையும் அமெரிக்காவிற்கு வழங்கியுள்ளனர்.

போலியான தேசப்பற்றின் அனைத்து முகங்களும் தகர்ந்துள்ளன,நள்ளிரவு 12:06 மணிக்கு கையெழுத்திடப்பட்டு எல்என்ஜி மின் உற்பத்தி நிலையங்ளன் முழுப் பொறுப்பும் அமெரிக்காவிற்கு வழங்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. இணையதளத்திற்குச் சென்று பார்த்தால் இந்த உடன்படிக்கையின் உள்ளடக்கங்கள் இல்லாத்தை காணலாம். எம் சி சி ஒப்பந்தத்தை முன்னைய அரசாங்கம் சமர்ப்பித்த போது எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் இன்று மௌனியாக உள்ளனர்.வியத் மக உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பா என்றும் தெரியாது.எம் சி சி யின் மற்றுமொரு வடிவமா இது என்ற சந்தேகமும் உள்ளது.எம் சி சி ஒப்பந்தம் தொடர்பாக எனது கற்றறிந்த நண்பர், வைத்தியர் சீதா ஆரம்பம்பொல வேலி மரங்கள் வெட்டப்படவில்லை என்றவாறு ஏலவே கூறினார், ஆனால் இன்று அமெரிக்கர் வந்து இலங்கையின் எதிர்கால சக்தியான எல்என்ஜி மின் நிலையத்தை எடுத்துச் சென்றுவிட்டனர்.

தேசிய பாதுகாப்பின் மற்றொரு அம்சம் தகவல் மற்றும் தரவுகளாகும். இது நாட்டிற்கு மிக முக்கியமான மற்றும் விலைமதிப்பற்ற வளமாகும். உங்களுக்குத் தெரியும், தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் 1.1 மில்லியன் கோப்புகளை அழிக்கப்பட்டுள்ளன.இது ஒரு ஆபத்தான விடயம். கையடக்கத்தொலைபேசியின் ஏதையோனும் அழிக்க முற்பட்டால் எவ்வாறு செயற்பாடு இடம் பெறும் என்று சகலரும் அறிவர்.இங்கு நடந்துள்ளவை தரவுத் தள அழிப்பாகும். இந்தத் திருட்டுகளிலிருந்து தப்பிக்க முடியாது என்று நாங்கள் கூறுகிறோம்.சிட்டுக்குருவிகள் மற்றும் அணில்களை அனுப்புவதன் மூலம் இவற்றிலிருந்து விடுபட அரசாங்கம் முயன்றால் விடுபடவே முடியாது என்பதை மீள வலியுறுத்துகிறோம்.தரவை அழிப்பது போன்ற ஆபத்தான நடவடிக்கைகளில் அரசாங்கம் செயல்பட்டு வருவதாக இருந்தால் தூர நோக்குப் பார்வையிள்ள நாட்டை நேசிக்கும் ஜனாதிபதி எவ்வாறு செயற்படுவார் என்பதை பார்ப்போம். நாட்டை நேசிப்பதாகக் கூறியது தனது அதிகாரத்தைப் துஷ்பிரயோகமாக பயன்படுத்துகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.டிஜிடல் அடையாள ்அட்டை சார்ந்த விடயங்களையும் இன்றைய ஊடக சந்திப்பில் குறிப்பிட்டார்.

மேலும், இந்த நாட்டில் உள்ள நீதித்துறைக்கட்டமை டிஜிடல் மயப்படுத்த மலேசிய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுகிறது.அங்கொன்றும் இங்கொன்றுமாக நிறுவனங்களுக்கு தகவல் கொடுக்கப்படுவது சரியான முடிவா என்று கேள்வி எழுப்பிய அவர், மொரட்டுவ பல்கலைக்கழம், கொழும்பு பல்கலைக்கழகங்களில் இருந்து கணினி நிபுணர்களைக் கொண்டு இத்தரவுத்தளங்களை உருவாக்க முடியாது என்றும் கேள்வி எழுப்பினார். எனவே, தற்போதைய ஜனாதிபதியால் ருவன்வெலிசேயா முன் வைத்த உறுதிமொழி கேலிக்குரியதாக மாறியுள்ளது.தேசிய பாதுகாப்பு அங்கும் இங்குமாக மாறியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :