அரச ஊழியர்
₹₹₹₹₹₹₹₹₹₹₹
அரச ஊழியர்களிடம்
அன்பாக நிதி கேட்கும்
அன்புள்ள கொண்ட
அன்பர்களின் கவனத்திற்கு
அறியாமல் வாய்திறந்து
அநியாயம் செய்யாதீர்கள்
அரச ஊழியர்கள்
அழகாக வாழ்ந்தாலும்
அவர்களின் வருமானம்
அவர்களுக்குப் போதாது
அடிப்படைச் சம்பளத்தை
அவர்களிடமே கேளுங்கள்
அரச கடன் எடுத்து
அழகாக விடு கட்டி
அக்கடனை அடைப்பற்கு
அழாத நாளில்லை
அவர்களிடம் நிதி கேட்டு
அநியாயத்தை சுமக்காதீர்கள்
தங்கக் கூட்டுக்குள்
தகதகப்பாய் தெரிந்தாலும்
தங்கள் வீட்டுக்குள்
தனியான பட்ஜட் போட்டு
தன்மான வாழ்க்கையை
தனியாக வாழ்கின்றனர்
அள்ளி இறைப்பதற்கு
அவர்களிடம் பணமில்லை
அடுத்த வீட்டில்
அவர்களை விசாரித்தால்
அத்தனையும் தெரியவரும்
அவர்களின் வரலாறு
அடுத்தவரிடம் கையேந்தாமல்
அழகாக வாழ்பவர்கள்
அத்தனையும் திட்டந்தான்
அடுத்தவர் கடன் கேட்டால்
அழகாகக் கதை சொல்வர்
அத்தனையும் உண்மை போல
வாழ்க்கைப் போராட்டம்
வாழ்ந்தால் தான் தெரியவரும்
வாழ்பவர்கள் எல்லோரும்
வசதி கொண்டவர்களில்லை
வாழ்க்கைத் திட்டம் தான்
வசதியாய் தெரிகிறது
கூலித் தொழிலாழி
குடும்பம் நடத்திடலாம்
குதூகலமாய் வாழ்ந்திடலாம்
குறைகாண யாருமில்லை
குடும்பச் செலவுகளும்
குறைவின்றி நடந்துவிடும்
அரச ஊழியர்கள்
அடக்கமாய் தான் வாழவேண்டும்
அளவுக்கு மீறி
அரைச் சதமும் செலவு செய்ய முடியாது
அளந்து செலவு செய்வதே
அவர்களது வாழ்வாகும்
சம்பளத்தில் தடைவந்தால்
சாப்பாட்டில் திண்டாட்டம்
சங்கதியை வெளியில் சொல்ல
சந்தர்ப்பம் வராது
சங்கடமான வாழ்க்கை
சந்தோசமாக வாழவிடுங்கள்
ஆடம்பரமாக அள்ளி இறைத்து
அழகாக வாழ்வோரும் உள்ளனர்
அவர்களின் வரலாற்றை
ஆராய முடியாது
அவரவர் வாழ்க்கை
ஆண்டவன் விதிப்படி
மாதச் சம்பளத்தில்
மனம் கொண்டு வாழ்கின்ற
மதிப்புள்ள ஊழியரை
மனச்சங்கடப் படுத்தாதீர்
மனதாற வாழ்த்துங்கள்
மங்களமாய் வாழட்டும்
வாழ்க்கைச் செலவு
வாழ்வதற்குப் போதாது
வாழ்ந்து பார்த்தால்தான்
வாழ்க்கை தெரியவரும்
வாழ்வோரை விட்டிடுவோம்
வளமாக வாழட்டும்
0 comments :
Post a Comment