முகங்கொடுத்து முன்னேறுங்கள்; சமூக வலைப்பின்னல் பின்னடைவிற்கல்ல!



எம்.எஸ்.எம்.மும்தாஸ் 4ஆம் வருடம் ; ஊடகக்கற்றைகள் துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்-
ஒரு கருத்தை உருவாக்குவதையும் அதனைச் செயல்படுமாறு தூண்டுவதையும் வலைத்தளத்தின் நோக்கங்களாகக் கொள்ளலாம். தகவல்களைத் தருவதோடு அவற்றின் பின்னுள்ள மனவுணர்வுகளையும் வலைத்தளங்கள் அறிவிக்கின்றது.

உணர்வையும் கருத்தையும் கூட வலைத்தளங்கள் மாற்றி விடும். 'உலகப் பெண்களின் பத்தாண்டுகள்' என்று யுனஸ்கோ நிறுவனம் 1975-1985 ஆண்டுகளை அறிவித்த பின் சமூக வலைத்தளங்கள் மூலம் மாற்றங்கள் நிகழ்ந்ததை ஒப்புக் கொண்டாக வேண்டும். மகளிரை நோக்கி சமூக வலைத்தளங்கள் திரும்பின. மகளிருக்கே உரிய சிக்கல்களை உணர்ந்து கொள்ளவும், அவர்களுக்கு விழிப்புணர்வை ஊட்டவும் முயன்றன. மகளிருக்கென்ற சமூக வலைத்தளங்கள் உருவாகின.

காலம் காலமாகக் கருத்து ரீதியான அடக்கு முறைக்காளாகி தமது வாழ்நாளைச் சமையலறை இருட்டிலும், பிள்ளைப்பேற்று அறையிலுமாகக் கழித்தவர்கள் மேல்தட்டு வர்க்கப் பெண்கள். வயிற்றுப்பாட்டுக்கான உழைப்பும், வீட்டுப் பொறுப்புக்களும் சுமையாக அழுத்தங்களின் அடையாளம் இழந்து போனவர்கள் கிராமப்புறப் பெண்கள், இவர்களின் ஒட்டுமொத்தமான முன்னேற்றத்தில் சமூக மாற்றம் காணும் நீண்டதொரு முயற்சி தேவைப்படுகிறது. இந்த முயற்சிக்கு வழிகாட்டும் பொறுப்பு சமூக வலைத்தளங்களுக்குண்டு.

பொதுவாகவே சமூக வலைத்தளங்களுக்கு பெண் மீது இருக்கும் பார்வை இரண்டு விதமானது. பெண் ஒரு கவர்ச்சிகரமான மோகப் பொருள் மற்றது தாய்மை, அன்பு, குடும்பப் பொறுப்பு மிக்க தியாக சொரூபம். இந்த இரண்டு நிலையிலும் வைத்து தான் பெண் சித்தரிக்கப்படுகிறாள். ஆணாதிக்க சமூக அமைப்பில் சமூக வலைத்தளங்கள் மட்டும் விதிவிலக்கு அல்ல. 1975 இல் வெளியான யுனஸ்கோ அறிக்கை, 'பெண்களை வெகுசன தொடர்பு சாதனங்களும் காம வடிவங்களாக்கிக் காண்கின்றன. இவை ஆணாதிக்கத்தால் உருவாக்கப்பட்ட உருவங்களேயன்றி பெண்களின் சுய வடிவங்களோ, உண்மை உருவங்களோ அல்ல' என்று கூறுகிறது.

சமூக வலைத்தளங்களை பெண்கள் பயன்படுத்துவதனால், பெண்கள் பற்றி சமூக வலைத்தளங்களில் பல விதமான நெரிசல்களை அவர்கள் முகங்கொடுத்து வருகின்றனர். ஆண்களுக்கு இருக்கும் உரிமையே பெண்களுக்கும் உண்டு. ஆனால் இச் சமூகம் பெண்களை வேலைத்தளத்திலும், வரதட்சனைக் கொடுமையிலும், சாதிக் கொடுமையிலும், சட்டப் பிரச்சினைகள் என ஏராளப் பிரச்சினைகளை சந்திக்கச் செய்கின்றது. இதனூடாக பெண்கள் சமூகத்தில் தலை நிமிர்ந்து வாழ பெரும் சிரமப்படுகின்றனர். வாய் விட்டுச் சொல்லவும் தயங்குகின்றனர். இவ்வாறான வன்முறைகளை சமூக வலைத்தளங்களில் முகங் கொடுக்கும் விதமே அவர்களை ஆழ்மனதில் ஆணியிட்டு அழ வைக்கின்றது.

இதில் மிகவும் கவலைக்குரிய விடயம் யாதெனில் பாலியல்; சார்ந்த செய்திகளை பிரசுரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பெண்கள் சார்ந்த பிரச்சினைகளை சமூக வலைத்தளங்களில் பிரசுரிக்கின்றனர். புகைப்படங்கள், கானொளிகள் என்பவற்றை whatsapp, viber மற்றும் முகப்புத்தகங்களில் பதிவிடுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட பெண் அவளின் குடும்பம் என்போர் மனக்கசப்புக்கு ஆளாக்கப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கையும் கேள்விக்குறிக்குள்ளாக்கி விடுகிறது.

பெண்களின் குடும்பப் பின்னணிகளைச் சுட்டிக் காட்டி அவமானப்படுத்தும் ஒரு சிலரும் இன்றைய சூழலில் வாழ்ந்து வருகின்றனர். பெண்கள் சமூக வலைத்தளங்களில் ஏதாவது பதிவிட்டால் அவ்விடயம் குறிப்பிட்ட யாரையாவது பாதித்தாலும், பாதிக்காவிட்டாலும் பெண்கள் மீதுள்ள தனிப்பட்ட பகை காரணமாக சமூக வலைத்தளங்களில் அவர்களை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக குடும்பப் பின்னணிகளைச் சுட்டிக் காட்டி பதிவிடுகின்றனர்.

போலியான முகப் புத்தகப் பாவனையினால் பெண்கள் அச்சுறுத்தப்பட்டு வரும் பிரச்சினையும் காலதிகாலமாக தொடர்கின்றது. அதாவது சமூகத்தில் ஆண் பெண் எனற இருவரும் போலி முகப் புத்தகங்களை பயன்படுத்தி வருவதை காணக் கூடியதாகவுள்ளது. அதிலும் ஆண்கள் பெண்களைப் போன்ற போலி முகப்புத்தகங்களைப் பயன்படுத்தி பெண்களை பாலியல் வன்முறைக்கும், வேண்டாத தொடர்புகளுக்கும் ஆளாகின்றனர். இத் தகாத செயற்பாட்டினாலும் பெண்கள் அதிகளவான மனச் சோர்வுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் பெண்களைக் குறிவைத்துக் காட்டும் வெறுப்புப் பேச்சுக்களையும் சுமந்து கொண்டே இன்றைய காலப் பெண்கள் காலத்தை கொண்டு செல்கின்றனர். ஆண்கள் பெண்களுடன் கள்ளக் காதல் வைத்திருந்தால் ஆண்களை கள்ளக் காதலன் என்று அழைக்காத சமூகம் பெண்களைக் கள்ளக்காதலி, விலைமகள், விபச்சாரி என்றெல்லாம்; தகாத சொற்களைக் கொண்டு அழைக்கின்றனர். பெண்களுக்கு எவ்வாறான வார்த்தைகளைச் கூறினால் கூனிக்குறுகுவார்கள் என்பதையறிந்து ஒரு சிலர் அவர்களை இழிவுப்படுத்தவே முயற்சிக்கின்றனர்.

மேலும் குடும்ப உறவுகளுக்குக் இடையில் வன்முறைகள் ஏற்பட சமூக வலைத்தளங்களும் காரணமாக அமைகின்றது. அதாவது கணவன் மனைவியருக்கிடையில் சந்தேகங்களும், விடாப்பிடிவாதங்களும், பிரச்சினைகளும் அதிகரிப்பதற்கு சமூக வலைத்தளங்கள் துணை செய்கின்றன. கணவன் வேலைக்கு சென்று வந்தால் அவனைக் கவனிக்காமல் வீட்டுப் பெண்கள் தொலைப்பேசியைப் பார்த்துக் கொண்டே இருப்பதனூடாக மனைவியின் மீது கணவனுக்கு வெறுப்பும் வேண்டாமையுமே ஏற்படுகின்றது. இதனால் பெண்களின் குடும்ப வாழ்வில் பிளவு ஏற்படுகின்றது.

இன்றைய இளம் பெண்கள் Tik tok , Bigboss போன்ற நிகழ்ச்சிகள் செய்வதனால் அவர்களின் கவர்ச்சிகளைக் காட்ட வேண்டிய சந்தர்ப்பங்களுமுண்டு. இதனை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதன் மூலம் ஏராளமானவர்கள் பார்வையிட்டு பெண்களை விமர்சனத்திற்கு உள்ளாக்கின்றனர். ஆகவே பெண்கள் தம் திறமைகளை வெளிகாட்ட சமூக வலைத்தளங்களில் இவ்வாறான நிகழ்ச்சிகளைச் செய்வதனூடாக தவறான புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

சமூக வலைத்தளங்களினூடாக தொலைப்பேசி அழைப்பு மற்றும் இணையவழி அரட்டை மூலம் பெண்கள் இன்னொருவருடன் தொடர்புகளை மேற்கொள்ள வேண்டி ஏற்படுகின்றது. இதன் மூலம் ஆண்களினூடாக பெண்களின் தொடர்பு இலக்கங்கள் மற்றும் தனிப்பட்ட விபரங்களை பிறர் களவாட அதிக வாய்ப்புக்களுண்டு.

சமூக வலைத்தளங்களிலும், முகப்புத்தகங்களிலும் பெண்கள் குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பாக கருத்துக்களைப் பதிவிடுவதன் மூலம் அவர்கள் எதிர்பார்த்தவற்றுக்கு மாற்றமாக Comments மற்றும் likes கிடைக்கின்ற போதும் ஒரு விதமான விரக்தியடையும் நிலை அதிகம் ஏற்படக் கூடும்.

அரசியல் விடயங்களில் அச்சு ஊடகங்களை விட சமூக வலைத்தளங்களிலேயே பெண்கள் அதிகளவில் சித்தரிக்கப்படுகின்றனர்;. அதாவது, அரசியலில் பெண்களின் வகிபாகம், பெண்கள் பற்றிய நிலைமை எவ்வாறுள்ளது என்பவற்றை சமூக வலைத்தளங்களே சித்தரிக்கின்றன. 2020 இல் இடம் பெற்ற பாராளுமன்ற தேர்தலில் பெண்களுக்கான உறுப்புரிமை தேசியப் பட்டியல் மூலமே அதிகளவில் கிடைத்திருக்கின்றமை பற்றி சமூக வலைத்தளங்களே பிரசுரித்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூக வலைத்தளங்களில் பெண்கள் தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கென பெண்கள் YouTube அலைவரிசைகள் மற்றும் Blogs போன்றவற்றை உருவாக்கி அவற்றில் நல்ல விடயங்களை பதிவிடுகின்றனர். Online இல் அதிகமாக பெண்கள் வியாபாரங்களை மேற்கொண்டு தங்களுக்கான அடையாளத்தைத் தக்க வைத்துக் கொண்டு வருவதை அவதானிக்க முடிகிறது. இதற்கப்பால் பெண்கள் சார்ந்த நற்பயன் தரும் விடயங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதையும் இன்றைய கால பெண்களின்; முன்னேற்றமெனக் குறிப்பிடலாம்.

ஆகவே பெண்களுக்கு எதிரான தகவல்கள். கருத்துக்கள் என்பவற்றை சமூக வலைத்தளங்களில் அவதானித்தோமேயானால் அவற்றைப் புறக்கணித்து; அவற்றுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் ஒரு சில நன்மைகளைத் தவிர பெண்கள் முகங்கொடுத்து வரும் வன்முறைகள் அதிகளவில் காணப்படுகின்றன. இவ்வாறான பெண்களுக்கெதிரான வன்முறைகள் அவர்கள் மீதான தாக்குதல் மறைமுகமாக எம்மீதானதும் எம் சமூகத்தின் வளமான எதிர்காலத்தின் மீதானதுமான செயற்பாடு என்பதை நாம் உணரந்து செயற்பட வேண்டும்;.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :