அதிபர் ,ஆசிரியர்கள் மீண்டும் கடமைக்கு திரும்புவார்கள் - அரசாங்கம் நம்பிக்கை



ல வருடங்களாக தீர்வு காணப்படாத அதிபர் ஆசிரியரகளின் சம்பள பிரச்சினைக்கு தீர்வாக ,மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு அவர்கள் மீண்டும் கடமைக்கு திரும்புவார்கள் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பதிரண தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (09) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு வழங்குவதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ள 5 ஆயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவை இந்த மாதத்தில் இருந்து சம்பளத்துடன் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2022 ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் சம்பள முரண்பாட்டை முழுமையாக தீர்ப்பதற்கான முன்மொழிவுகள் இடம்பெறவுள்ளன. குறிப்பிட்ட வகையில் இவை நடை முறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பதிரண மேலும் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :