யானை மற்றும் மனித மோதலுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்- இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க



பாறுக் ஷிஹான்-
ம்பாறை மற்றும் பதுளை மாவட்டங்களில் நீண்ட காலமாக நிலவி வரும் யானை-மனித மோதலுக்கான தீர்வு விரைவில் பெற்றுக் கொடுக்கபடும் என வனஜீவராசிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார் .

இதற்கமைய அம்பாறை மற்றும் பதுளை மாவட்டங்களில் காட்டு யானைகளின் அச்சுறுத்தலைக் குறைக்க உடனடி நடவடிக்கை தொடர்பில் மகாஓயா சிவில் பாதுகாப்பு படை முகாம் கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை(28) மாலை உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது .

இதன் போது என் கொல்லப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, நாளை முதல் அனைத்து மின்சார யானை வேலிகளிலும் இரவு நேர ரோந்து நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது..

மேலும் மின்சார யானை வேலியின் 01 கி. மீ. தொலைவில் ஒரு காவல் நிலையம் அமைக்கப்படும், இவ்வாறு அமைக்கப்படும் ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் 04 காவலர்கள் நியமிக்கப்படுவார்கள். எதிர்காலத்தில் இதற்கென 5000 புதிய பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் எனவும் வனஜீவராசிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் சிவில் பாதுகாப்பு படையினர் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகள் ஆராயப்பட்டு தீர்வுகளும் எட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :