பஹன்துடாவ காணொளி – அந்தப் பெண் யார் தெரியுமா?


J.f.காமிலா பேகம்-

ரத்தினபுரி – பலாங்கொடை பஹந்துடாவ எல்ல நீர்வீழ்ச்சியில் நிர்வாணமாக பாலியல் செயற்பாடுகளை ஈடுபடும் போது, அவற்றை ஒளிப்பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டவர்களை பொலிஸார் தேடி வலைவிரித்திருந்தனர்.

வெளிநாட்டு, உள்நாட்டு உல்லாச பயணிகள் குடும்பங்களுடன் சென்று நீராடும் அந்த நீர்வீழ்ச்சிக்கு கீழிருக்கும் நீர் நிலையில் வைத்தே, நிர்வாணமாக பாலியலில் ஈடுபடும் காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவ்வாறான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளமை தொடர்பிலும் அதன் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தரவேற்றப்பட்டுள்ளமை குறித்தும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என இரத்தினபுரி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் என்.டீ.டி.வீரசிங்க உறுதிப்படுத்தியிருந்தார்.

அங்குச் சென்றிருந்த காதல் ஜோடியொன்று நிர்வாணமாக பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. இதன்போதே, அக்காட்சிகள் வீடியோவாக பதிவுசெய்யப்பட்டு, சமூக வலைத்தளங்களில் ஏற்பட்டுள்ளன என தெரியவருகின்றது.

எவ்வாறாயினும் குறித்த காணொளியில் தோன்றிய பெண்ணை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

அவர் இதற்கு முன்னரும் இதுபோல காணொளியில் பங்கேற்றியிருப்பதாகவும், அவர் அழகுசார்ந்த கலையில் ஈடுபட்டிருப்பவர் என்றும் கூறப்பட்டது.

பலங்கொடை – பஹன்துடாவ நீர்வீழ்ச்சியின் வளாகத்தில் ஆபாசமாக நடந்துகொண்ட இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று மாலை கைதாகியிருக்கின்றனர்.

குறித்த ஆண் சந்தேக நபர் மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுநபர் என்பதோடு குறித்த பெண் காலி – எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடையவர் என தெரியவருகிறது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :