ஜனாதிபதியின் கிராமத்திற்கான அபிவிருத்தி வேலைத் திட்டம் இன,மத பேதமில்லாமல் முன்னெடுப்பு இணைப்பாளர் எஸ்.சல்மானுல் சப்ரி



எம்.ஏ.முகமட்-
னாதிபதியின் கிராமத்திற்கான கலந்துரையாடல் வேலைத் திட்டத்தின் அடிப்படையில் நாட்டிலுள்ள ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் 3 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரலயின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் எஸ்.சல்மானுல் சப்ரி தெரிவித்தார்.

கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவிலுள்ள றகுமானியா நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில் இடம் பெற்ற கிராமத்துடனான கலந்துரையாடல் அபிவிருத்தி திட்ட நிகழ்வின் போதே குறிப்பிட்டார்.அவர் இங்கு மேலும் குறிப்பிட்டதாவது

இந்த நிதியினை எங்களுடைய கிராமத்தில் மேம்படுத்துவதற்காக 40 வீதம் வாழ்வாதார உதவிகளுக்கும்,40வீதம் உட் கட்டமைப்பு வசதிகளுக்கும், ஏனைய சுற்று சூழலுக்கு10 வீதமும் ,சமூக நலனோம்புகை மற்றும் சமூக அபிவிருத்திக்காக 10வீதமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இந்த வேலைத் திட்டத்தினை எங்களுடைய இந்த கிராம சேவகர் பிரிவிற்கு பொருத்தமான வகையில் எவ்வாறு பயன்படுத்துவது என்பது சம்பந்தமான கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. அதாவது வாழ்வாதார உதவிகள் என்று சொல்லும் போது உண்மையிலேயே சரியான பயனாளிகள் இங்கு தெரிவு செய்யப் பட வேண்டும். 

இப் பிரதேசத்தை எடுத்துக் கொண்டால் கூடுதலாக மீன்பிடித் தொழிலை மையமாகக் கொண்டு தொழில் செய்து வருகின்றனர்.வாழ்வாதார உதவி வந்தாலும் இப்பிரதேச மக்கள் எதிர்பார்ப்பது தோணியையும் வலையையுமாகும்.வாழ்வாதார திட்டம் வந்தால் அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு வேறு என்ன வகையான வாழ்வாதார உதவி வழங்க முடியும் என்பது இந்த இடத்தில் கலந்துரையாடப் படவேண்டும். வழங்குகின்ற வாழ்வாதார உதவி ஏதாவது தொழில் செய்கின்ற ஒருவருக்கு வழங்குவதா ?அல்லது தொழில் செய்து கொண்டிருக்கின்ற அவருடைய தொழிலை மேம்படுத்துவதற்கு வழங்குவதா ?அல்லது புதிதாக ஒரு தொழில் நேர்த்தியை மேம்படுத்துவதற்கு வழங்குவதா ?என்ற விடயங்களும் இங்கு கலந்துரையாடப் வேண்டும்.இத்திட்டத்தில் வேலைவாய்ப்பற்றிருக்கும் இளைஞர்களுக்கும் முன்னுரிமையளிக்கப்பட வேண்டும்.

கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 31 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குட் பட்ட வீதிகளுக்கு தலா 2இலட்சம் ரூபாய் வீதமும் ,இப்பிரதேசத்தில் மீள் குடியேறியவர்களுக்கான வீட்டுத்திட்டத்திற்கு16 இலட்சம் ரூபாய் பெறுமதியில் வீடுகளும்,பாடசாலைகளுக்கு 756 கணனிகளும்,கந்தளாய் பிரதேச பாடசாலைகளுக்கு 300கணனிகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான கபில நுவன் அத்துகோரலயினால் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதிமேதகு ஜனாதிபதி சிங்கள, தமிழ் ,முஸ்லிம் என்று பேதங்கள் பார்க்காது நாட்டுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த வேலைத் திட்டம் சரியான முறையில் முன் கொண்டு செல்லப் பட வேண்டும் என்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :