தடுப்பூசி ஏற்றலில் காரைதீவு சுகாதாரப்பிரிவு சாதனை!



வி.ரி.சகாதேவராஜா-
ல்முனைப்பிராந்தியத்திலுள்ள 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தடுப்பூசி ஏற்றலில் காரைதீவுப்பிரதேசம் சாதனை படைத்துள்ளது.

முதலாவது தடுப்பூசி 105.86 வீதமும் இரண்டாவது தடுப்பூசி 71.88வீதமும் ஏற்றி சாதனைபடைத்துள்ளது.

கல்முனைப்பிராந்தியத்தில் நேற்றுடன் நிறைவடைந்த 1லட்சம் இரண்டாவது தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் 13சுகாதாரப்பிரிவுகளுள் 71.88வீதம் செலுத்தி காரைதீவுப்பிரதேசம் முன்னணியிலுள்ளது. அதேவேளை 66.63வீதம் செலுத்தி ஆலையடிவேம்பு பிரதேசம் இரண்டாம் நிலையிலும் 62.74வீதம் செலுத்தி நிந்தவூர்பிரதேசம் மூன்றாம் நிலையிலுமுள்ளது.
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் டாக்டர் தஸ்ஸீமா வசீர் தலைமையிலான குழுவினரின் அர்ப்பணிப்பான சேவை காரணமாகவே இச்சாதனை நிகழ்த்;தப்பட்டுள்ளது.

இதையிட்டு காரைதீவு பிரதேசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் முதல் இங்குள்ள பொதுநலஅமைப்புகள் வரை சுகாதாரiவைத்தியஅதிகாரி டாக்டர் தஸ்லிமா குழுவினருக்கு பாராட்டையும் நன்றிகளையும் தெரிவித்துவருகின்றனர்.

அதேவேளை ஆலையடிவேம்பு பிரதேசம் முதல் டோஸில் அதிகூடிய 108.99 வீதமும் இரண்டாம் டோஸில் 66.63வீதமும் செலுத்தி சாதனை படைத்துள்ளது.

கிழக்கில் முதலாவது டோஸில் அதிகூடிய 95வீதத்தை கல்முனைப்பிராந்தியம் பூர்த்திசெய்து சாதனை படைத்துள்ளது. அதற்காக கல்முனைப் பிராந்திய சுகாதாரசேவைபணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன் தலைமையிலான குழுவினருக்கு சமுகவலைத்தளங்களில் பாராட்டுமழை பொழிந்தவண்ணமுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :