தந்தையின் கண் ஒன்றை அவரது மகன் தனது கை விரல்களால் தோண்டி சிதைவடையச் செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் பாடசாலை வீதியிலேயே இச் சம்பவம் சனிக்கிழமை (18) மாலை இடம்பெற்றுள்ளது.
தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணாமாக 67 வயதுடைய தந்தையை கடுமையான முறையில் தாக்கியதன் பின்னர் அவரது 19 வயதுடைய மகன் கண்ணை தோண்டி சிதைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த அகோர செயலுக்கு போதைவஸ்துப் பாவனையே காரணமாக அமைந்துள்ளது என்று பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இவ்வாறு கண் சிதைவடைந்து வெளியில் வந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்நபர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
இக் கோரச் செயலைச் செய்த நபரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment