நாட்டின் நிலை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்த கருத்துக்கள்



இன்றைய(30) ஊடக சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்ததாவது 

இன்று நாட்டில் ஏன் இந்த நிலைமை எழுந்துள்ளது.தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனம் கிடப்பில் உள்ளது.உண்மையில், சுபிட்சத்தின் தொலைநோக்குத் திட்டத்தின் வாக்குறுதிகளை நம்பியே 69 இலட்சம் மக்கள் வாக்களித்தனர்.மூன்றில் இரண்டு பெருன்பான்மை,20 ஆவது திருத்தம், புதிய நிர்வாக அதிகாரங்களைக் கொண்டு வந்து, புதிய அமைச்சரவையை உருவாக்கி, ஊழல் இல்லாத புதிய பயணத்திற்கான பாதைக்காக மக்கள் விரும்பியே ஒரு ஆட்சியை நியமித்தனர்.
கடந்த ஒன்றரை ஆண்டுளுக்கு முன்பு,ஐக்கிய இளைஞர் சக்தி ரூ.15 பில்லியன் மதிப்புள்ள சீனி மோசடிக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை தாக்கல் செய்தது. இது வரை எத்தகைய விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை.இந்த நாட்டில் உள்ள அனைத்து திருட்டு, மோசடி மற்றும் ஊழல்களையும் கட்டுப்படுத்தப்பட்டதற்காகவே நாங்கள் வருந்துகிறோம் என்று ஆரம்பத்தில் கூறினர்.

அன்டிஜென் மற்றும் பிசிஆர் பரிசோதணைகளில் பாரிய அளவில் ஊழலில் ஈடுபட்டு நம்பி வாக்களித்த அப்பாவி மக்களின்

பணத்தை சூரையாடனர்.

இன்று நாட்டை விட்டு செல்ல ஒரு மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று குடிவரவுத் திணைக்களம் கூறுகிறது.1983 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இத்தகைய பெரும் எண்ணிக்கையிலான இளைஞர் யுவதிகள் வெளிநாடு செல்ல முற்ப்பட்ட ஒரே சந்தர்ப்பம் இதுவாகும். இளைஞர்கள் மத்தியில் இந்த நாட்டில் எதிர்காலம் இல்லை என்ற கருத்து இருப்பதால் தான் இவ்வாறு பெரும் எண்ணிக்கையிலான இளைஞர் யுவதிகள் வெளிநாடு பயணிக்க மிகக் குறுகிய காலத்தில் விண்ணப்பித்துள்ளனர்.
எதிர்காலத்தில் அமையவுள்ள சஜித் பிரேமதாச தலைமையிலான அரசாங்கத்தின் கீழ், இந்த இளைஞர்களை நாங்கள் கவனித்துக்கொள்வோம்.நம்பிக்கையை கட்டியொழுப்புவோம்.

சுபிட்சத்தின் தொலைநோக்கில், மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரம் உருவாக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால் இன்று நெல் விவசாயிகள், காய்கறி விவசாயிகள், மீனவர்களின் இன்றைய நிலை என்ன?தேர்தல் மேடைகளில் அவர்கள் பல வாக்குறுதிகளை அளித்தனர், இலவச உரங்கள் தருவதாக உறுதியளித்துள்ளனர். சகோதரணிடம் கேட்டே வாக்குறுதியளித்தார். உரங்கள் இன்மையால் விவசாயிகள் சிரமம்படுகிறார்கள்.அரசாங்கம் இலவச உரத்தை கொடுக்க வந்து ஒரு உர மாபியா திட்டத்தை முன்னெடுக்கிறது. உரம் தொடர்பான முழுப் பொறுப்பும் அரசாங்கத்திற்கே இருக்கிறது. இந்த செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் அரசாங்கத்திடம் இல்லை என்றால் எங்களிடம் ஒப்படையுங்கள் நாங்கள் செய்கிறோம்.




இன்று அரிசி வாங்குவதில் ஜனாதிபதியை விட டட்லி சிறிசேனவே முன்னிலையில் உள்ளார். அரிசியின் விலையை கட்டுப்படுத்த ஏழு வர்த்தமானிகளை விட அதிக எண்ணிக்கையிலான வர்த்தமானிளை வெளிட்டாலும் இன்றளவில் கூட அரிசிக்கான உத்தரவாத விலையை தீர்மானிக்க முடியாதுள்ளது.வர்த்தமானிகளை மீளப் பெறுவதையே தொடர்ச்சியாக மேற்கொள்கின்றனர்.சுபிட்சத்தின் தொலைநோக்கை ஜனாதிபதி ஒரு முறை வாசித்துப் பார்த்தால் மக்களை ஏமாற்றிய விதம் புரியும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :