தென்கிழக்கு பல்கலைக்கழகம் தனது 25 ஆண்டு நிறைவு வெள்ளி விழாவை கொண்டாடிக்கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் எம்மால் இலகுவில் மறக்க முடியாதவர்கள் தான் Prof. K. Ishkaq , Prof MIM.Kaleel , Prof MSM.Jalaldeen , Dr. SMM. Aliff , & Dr. MIM .Rafeeq , போன்றோரும் மற்றும் ஸ்தாபக மாணவர்கள் 33 பேருமே...
இலங்கையில் ஏற்பட்ட இனப்பிரச்சினையின் காரணமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்கு வந்தாறுமூலையிலுள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடர தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் தமிழ் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையேயான இனமுரண்பாடுகள் கூர்மையடைந்ததைத்தொடர்ந்து, முஸ்லிம் மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கிழக்கு பல்கலைக்கழகத்தையும் விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அதனால் அவர்களின் கல்விச்செயற்பாடுகள் பாதிக்கப்பட்டன. இந்த இடம்பெயர்ந்த மாணவர்கள் தற்காலிகமாக கொழும்பு , பேராதெனிய மற்றும் தென்பகுதியிலுள்ள பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டனர். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைகுழுவினால் நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளரின் வழிகாட்டுதலின் கீழ் இந்த மாணவர்களுக்கு தனித்தனியாக விரிவுரைகள் நடத்தப்பட்டதுடன் கிழக்கு பல்கலைக்கழகமே பரீட்சை பேப்பர் எடுத்தல் மற்றும் பரீட்சை பெறுபேறுகளை திருத்துதல் அதனால் மாணவர்கள் அதிகமாக சித்தி பெறத் தவறுதல் அது மாத்திரமன்றி இந்த இடம்பெயர்ந்த மாணவர்கள் போக்குவரத்து, தங்குமிடம் மேலும் பயங்கரவாத நிலமை போன்ற பல சிரமங்களை எதிர்கொண்டனர். இதனால் மாணவர்களும், இடம்பெயர்ந்த விரிவுரையாளர்களும் எமது பிரதேசத்தில் ஒரு பல்கலைக்கழகம் உருவாக்கப்படவேண்டும். இதுவே எமது சமுகத்திற்கு நிரந்தர தீர்வைப் பெற்றுத்தரும் என்ற தொனிப்பொருளில் காத்திரமான போராட்டங்களையும் அழுத்தங்களையும் மேற்கொண்டனர்.
இந்நிலமையில் கிழக்கு பல்கலைக்கழக கடைசி தொகுதி மாணவர்களும் இப்பல்கலைக்கழக ஸ்தாபக மாணவனுமான நானும் , எனது மானவ தோழர்கள் 32 பேரும் மற்றும் ஸ்தாபக விரிவுரையாளர்கள் 5 பேரும் தனது படிப்பையும், தனது பதவியையும் தியாகம் செய்து கிழக்கு பல்கலைக்கழகத்தை பகிஷ்கரிப்பு செய்து போராட்டம் பல நடாத்தி வந்தாறுமூலை பல்கலைக்கழகத்தில் ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வரும் அநியாயங்களை முழு இலங்கைக்கும் வெளிக்காட்டிணோம் அத்துடன் கலாநிதி சித்திக் சேர், சகோதரன் ஏ. எம். ஜெமீலுடன் இனைந்ததான இஸ்லாமிய மானவ பேரவை மற்றும் எமது பிரதேசங்களை சேர்ந்த இயக்கங்கள்,பள்ளிவாசலல்களின் நிர்வாகிகள் இனைந்து பல எழுர்ச்சி கூட்டங்களை நடாத்தி சமுக மட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தோம்.
இவை அனைத்தையும் அறிந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத்தலைவர் மறைந்த மாண்புமிகு எம்.எச்.எம். அஷ்ரஃப், P.C. அவர்கள் அப்போதய சந்திரிக்கா பண்டாரநாயக்க அம்மையார் அவர்களின் அரசில் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, மறுவாழ்வு மற்றும் புனரமைப்பு அமைச்சராகவும், பலமான சக்தியாகவும் காணப்பட்டார். அன்னார் இப்பிரச்சினைக்கான நிலையான தீர்வைக் காண உடனடியாக அரசாங்கத்துடன் பல்வேறுபட்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.
அவ்வேளையில் பிராந்திய பகுதிகளுக்கு பல்கலைக்கழக கல்வியை விரிவுபடுத்துவதில் சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் அரசு ஆர்வம் கொண்டிருந்தது. இத்தகைய சூழ்நிலையில்தான் இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகக் கல்லூரி மறைந்த மாண்புமிகு அமைச்சர் அல்- ஹாஜ் MHM. அஷ்ரஃப், P.C அவர்களின் அபார முயற்சியினால் , முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க அவர்களின் உத்தரவுக்கிணங்க, அப்போதய கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர் மறைந்த ரிச்சர்ட் பத்திரன அவர்கள் பல்கலைக்கழகத்தின் பிரிவு 24A சட்டத்தின் கீழ், 1978ம் ஆண்டு 16ம் இலக்க பல்கலைக்கழக சட்டம், அதன் பின்னால் திருத்தப்பட்ட பல்கலைக்கழக சட்டமூலத்துக்கமைய, 881/9ம் இலக்க வர்த்தமானி அறிவிப்பின் மூலம், இலங்கையின் பத்தாவது தேசிய அரச பல்கலைக்கழகமாக தென்கிழக்குப் பல்கலைக்கழகக் கல்லூரியை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, பேராதனை பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியலின் சிரேஷ்ட விரிவுரையாளர், பேராசிரியர் எம்.எல். ஏ. காதர் அவர்கள் இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகக் கல்லூரியின் பணிப்பாளராக 1995 ஆகஸ்ட் 1ம் திகதி முதல் செயற்படும் வண்ணம் நியமிக்கப்பட்டதுடன். மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவிப் பதிவாளர் ஏ. எல். ஜஃபர் சாதிக், அவர்கள் தென்கிழக்குப் பல்கலைக்கழகக் கல்லூரிக்கு 1995 ஒக்டோபர் 4ம் திகதி முதல் செயற்படும் வண்ணம் பதில் பதிவாளராகவும்மேலும் நிந்தவூரை சேர்ந்த எம்.எம்.குலாம் றசீட் அவர்கள் நிதியாளராகவும் நியமிக்கப்பட்டனர்.
மேலும் அட்டாளைச்சேனையிலுள்ள அரசினர் ஆசிரியர்கள் பயிற்சிக் கல்லூரியின் வளாகத்தின் ஒரு பகுதியில் கல்வி நடவடிக்கைகளைத் தொடங்குவதற்காக அந்த ஸ்தாபக 5 விரிவுரையாளர்களுடன் ஏனைய விரிவுரையாளர்களும் மற்றும் கல்விசார ஊழியர்களும் நியமிக்கப்பட்டனர்.
இதன்பயனாய் ஒக்டோபர் 23, 1995 அன்று, இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகக் கல்லூரி மறைந்த ரிச்சர்ட் பத்திரண, அமைச்சர். M.H.M அஷ்ரஃப், அவர்களினால் கோலாகலமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இதேவேளை ஒலுவிலில் மிக ரம்மிதமான அமைவிடத்தில் 220 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு பல்கலைக்கழகத்தின் நிரந்தரக் கட்டுமானப் பணிகள் மாண்புமிகு அஷ்ரஃபின் முயற்சியினால் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
இப்பல்கலைக்கழக கல்லூரி, கிழக்கு பல்கலைக்கழகத்தில் இருந்து இடம்பெயர்ந்த 1992/93 கல்வியாண்டைச் சேர்ந்த ஸ்தாபக 19 வணிக பீட மாணவர்கள், ஸ்தாபக 12 முகாமைத்துவ பீட மாணவர்கள் மற்றும் ஸ்தாபக 02 கலை பீட மாணவர்களுடன் தனது கல்வி செயற்பாட்டைத் தொடங்கியது. கலை கலாச்சாரம், மற்றும் வர்த்தக முகாமைத்துவம் ஆகிய ஸ்தாபக பீடங்களுடன்,இப்பல்கலைக்கழகக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டபொழுது, பல்கலைக்கழகத்திற்குரிய எந்த நியம வசதிகளும் இருக்கவில்லை. ஆனால் கல்விச் செயற்பாடுகளை எந்த அவகாசமும் இல்லாமல் ஆரம்பிக்க வேண்டியிருந்தது.
எனவே பல்கலைக்கழக சமூகமும் மற்றும் ஸ்தாபக மாணவ தொகுதியினரும் பல்வேறுபட்ட சவால்களை துணிச்சலுடன் எதிர்கொண்டு மிக அர்ப்பணிப்புடன் சேவையாற்றியதை நன்றியுடன் இவ்விடத்தில் நினைவு கூறவேண்டும்.
இதன்பயனாய், இப்பல்கலைக்கழகக் கல்லூரி, 1996 மார்ச் 27 திகதியிடப்பட்ட 916/7ம் இலக்க வர்த்தமானி அறிவிப்பின் மூலம், 1996 மே 15 முதல் முழுமையான தேசிய பல்கலைக்கழகமாக அப்போதய கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சரால் தரமுயர்த்தப்பட்டது.
இதன்பயனாய், இப்பல்கலைக்கழகக் கல்லூரி, 1996 மார்ச் 27 திகதியிடப்பட்ட 916/7ம் இலக்க வர்த்தமானி அறிவிப்பின் மூலம், 1996 மே 15 முதல் முழுமையான தேசிய பல்கலைக்கழகமாக அப்போதய கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சரால் தரமுயர்த்தப்பட்டது.
பேராசிரியர் எம்.எல். ஏ. காதர் அவர்கள் “இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின்” ஸ்தாபக உப வேந்தராகவும் நியமனமிக்கபட்டார்.இதன் போது எனது தலமையில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவின் படங்களையே கீழே காண்கிறார்கள்.
தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட முதல் வருடத்தில் (1995), கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடமையாற்றிய கீழ் வரும் ஐவர் மட்டுமே பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் ஆலோசனையின் அடிப்படையில் இப்பல்கலைக்கழகத்துக்கு முதலாவது தொகுதி ஆரம்ப விரிவுரையாளர்களாக இணைத்து கொள்ளப்பட்டனர்
தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட முதல் வருடத்தில் (1995), கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடமையாற்றிய கீழ் வரும் ஐவர் மட்டுமே பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் ஆலோசனையின் அடிப்படையில் இப்பல்கலைக்கழகத்துக்கு முதலாவது தொகுதி ஆரம்ப விரிவுரையாளர்களாக இணைத்து கொள்ளப்பட்டனர்
இவர்களின் விபரம் கீழே..............
01.இப்போதும் அங்கு புவியியல் துறையில் கடமையாற்றும் பேராசிரியர் M. I. M. கலீல்
02. அரசியல் விஞ்ஞான துறையில் கடமையாற்றிய சிரேஷ்ட விரிவுரையாளர்
S. M. M. ஆலிப்.
03.சவூதி அரேபிய பல்கலைக்கழகத்தில் வணிகத் துறையில் உதவி பேராசிரியராக கடமையாற்றும் கலாநிதி A. M. இஸ்ஹாக்.
04. 2019ல் ஓய்வு பெற்ற அறபுத்துறை பேராசிரியர் M. S. M. ஜலால்தீன்
05.ஐக்கிய இராச்சிய பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் கலாநிதி. M. I. M. றபீக்
அதேபோல் ஸ்தாபக 33 மாணவர்களின் ஊர் வாரியான விபரம் கீழே................
அக்கரைப்பற்று
ஃஃஃஃஃஃஃஃஃஃஃ
01. உ.லெ.முகம்மது ஆகிர்
02. ஐ.எல். றிஸ்வான்
03.ஐ.எல்.பைசல்
04.ஏ.எம்.பாயிஸ்
05. எம்.எச்.சக்கி
06.ஐ.எல்.மஹ்மூதா
07.எ.எம்.சக்கீனா
அட்டாளைச்சேனை
ஃஃஃஃஃஃஃஃஃஃஃ
01.கே.எம்.அன்சார்
02.எ.ஏல்.யாசீன்
ஒலுவில்
ஃஃஃஃஃஃ
01. ஏல். உசைன்டீன்
நிந்தவூர்
ஃஃஃஃஃஃ
01.ஐ. எல். பாயிஸ்
02.ஐ.எல்.தஸ்லீம்
03.ஏ.ஜெமீல்
04.எம். ஐ.இஹ்ஸானா
05எம்.எம்.மஜீத்
சம்மாந்துறை
ஃஃஃஃஃஃஃஃ
01.ஐ.எல்.பசீல்
02.எம்.எம்.சல்பியா உம்மா
03.ஏ.எம். நபீறா உம்மா
சாய்ந்தமருது
ஃஃஃஃஃஃஃஃ
01.எஸ்.எச்.உவைஸ்
கல்முனை
ஃஃஃஃஃஃ
01.எ.ஏல்.மஜீட்
02.ஏ.எம்.தெளபீக்
03.எஸ்.எல்.தாஹிர்
மருதமுனை
ஃஃஃஃஃஃஃ
01.எம்.என்.ஸியாத்
02.எஸ்.எல்.அன்வர்
03.எ.எல்.ஜெமீல்
04.ஏ.மனார்தீன்
காத்தான்குடி
ஃஃஃஃஃஃஃஃ
01.ஏ.ஏம்.முஸ்தபா
02.எம.எச்.நஜீமா
03.ஐ.எல். ஹினாயா
ஏறாவூர்
ஃஃஃஃஃ
01 யூ.எல்.பலீலா உம்மா
ஓட்டமாவடி
ஃஃஃஃஃஃஃ
01ஏ..ஜஃபர் கான்
02.எச்.சித்தீக்
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அடைவுகள், அதன் பங்களிப்புகள் பற்றி ஆராய்வதும் மேலும் அதன் உருவாக்கத்திற்கு முன்னின்ற தியாகிகளின் பங்களிப்புகளை நினைவுகூருவதும் எமது கல்விச் சமுகத்தின் தலையாய கடமையாகும்.
இப்பல்கலைக்கழகம் கல்வி, ஆராய்ச்சி மற்றும் சமூக செயற்பாடுகளில் தேசிய மற்றும் சர்வதேசிய ரீதியில் காத்திரமான பங்களிப்புகளை வழங்கி வீறு நடை போட்டு தனது 25 வது வருடத்தை பூர்த்தி செய்து இலங்கையில் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக தனது வெள்ளி விழாவைக் கொண்டாடுவதை இட்டு ஸ்தாபக மாணவ பேரவை தலைவர் என்ற வகையிலும் 33 ஸ்தாபக மாணவர்களில் ஒருவன் என்ற வகையிலும் பெருமிதம் கொள்கிறேன்.
உ.லெ. முகம்மது ஆகிர்,
ஸ்தாபக மாணவ பேரவை தலைவர்,
இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகம்.
2021/09/16
0 comments :
Post a Comment