மறைந்த ஈழத்தின் மூத்த எமுத்தாளர் நந்தினி சேவியர் அவர்களுக்கான நினைவரங்க நிகழ்வு சம்பூர் தமிழ்க்கலா மன்றத்தின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 7மணிக்கு Zoom செயலினூடாக இடம் பெறும் .
கவிஞர் . சம்பூர் சமரன் தலைமையில் இடம் பெறவுள்ள இந் நிகழ்வில், நிகழ் நிலை ஒருங்கிணைப்பினை கவிஞர் பா. பிரியங்கன் வழிநடத்த , நினைவுப் பகிர்வுகளை பேராசிரியர் பால சுகுமார், கலாசார உத்தியோகத்தர் வி. குணபாலா, வைத்தியர் அ. சதீஸ்குமார், கவிஞர்களான யோகானந்தன், சச்சிதானந்தம், சுஜந்தன், ஸ்ரீ ஞானேஸ்வரன், அ . அச்சுதன், சி. பிரகாஷ் ஆகியோர்கள் வழங்குவார்கள்.
இரங்கல் கவியினை கவிஞர் சேனையூர் இரத்தினா, கவிஞர் கொட்டிய ஆரன் நடந்த இரங்கற்பாவை கவிஞர் சம்பூர் தில்லைநாதன், கவிஞர் கட்டைபறிச்சான் மதுரன் ஆகியோர்கள் வழங்குவார்கள்.
நந்தினி சேவியர் பாடசாலை தமிழ்ப் பாடப் புத்தகத்திலும் இடம் பிடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment