"இலங்கையில் இஸ்லாமிய சட்ட ஏற்பாடும் தற்போதைய நிலையும்"
எனும் தொனிப்பொருளில் முன்னாள் அமைச்சர் கலாநிதி மர்ஹூம் ஏ.ஆர். மன்சூர் அவர்களின் கனிஷ்டப் புதல்வியும்,
அவுஸ்திரேலிய முஸ்லிம் பெண்கள் கௌன்ஷிலியின் செயலாளரும், ஏ. ஆர். மன்சூர் பவுண்டேஷனின் ஸ்தாபகத் தலைவரும் மற்றும் அவுஸ்திரேலிய நாட்டில் குடிவரவு குடியகழ்வுத்துறையில் நிபுணராகக் கடமையாற்றும் சட்டத்தரணி மர்யம் நளீமுடீன் ஆற்றிய உரை.
இலங்கையில் முஸ்லிம்களுக்கான சட்டம் ஏழாம் நூற்றாண்டுகளில் இருந்து ஆரம்பமாகின்றது. ஆனால் இது எழுதப்படாத சட்டமாக காணப்பட்ட கொண்டிருந்தது.
15ம் நூற்றாண்டில் கொழும்பில் முஸ்லிம்களுக்கென்று பிரத்தியோகமான நீதிமன்றங்கள் உள்ளது என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். சேர் ஜேம்ஸ் டெனன்ட்
என்பவர் (Ceylon: An Account of the Island Physical, Historical and Topographical) எனும் அவருடைய நூலிலே முஸ்லிம், கிறிஸ்தவ மற்றும் யூத மதங்களை அடிப்படையாகக் கொண்ட நீதிமன்றங்கள் இருந்தது என குறிப்பிட்டார்.
1505 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயர் இலங்கை வந்த போது கொழும்பு துறைமுகத்தை சுற்றி இருந்தவர்கள் பெரும்பாலானோர் முஸ்லிம்களாகவே இருந்தனர். அவர்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்காக இஸ்லாமிய நீதிமன்றங்கள் காணப்பட்டிருக்கின்றன என எஸ்.ஜே.பரீஸ்
என்பவர் தன்னுடைய நூலான "ஹிஸ்ட்ரி ஒப் சிலோன்" என்ற நூலில் குறிப்பிட்டிருக்கின்றார்.
போர்த்துக்கேயரின் ஆட்சிக் காலமானது முஸ்லிம்களின் உரிமை, உடமை, பொருளாதாரம் என்பவற்றை முடக்கும் ஒரு ஆட்சியாக இருந்தது. இந்த ஆட்சிக்காலத்தில்தான் அனேகமான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டார்கள். பின்னர் முஸ்லிம்கள் கிழக்கு மாகாணங்களை நோக்கி நகரத் தொடங்கினார்கள்.
பின்னர் ஒல்லாந்தர் நாட்டை கைப்பற்றினார்கள். இவர்கள் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் எனும் நோக்குடன் விரட்டப்பட்ட அத்தனை முஸ்லிம்களையும் ஒன்று சேர்த்து அவர்களுக்கான பாதுகாப்பான குடியிருப்புக்களை அமைத்துக் கொடுத்தார்கள்.1770 ஆம் ஆண்டு ஒல்லாந்தர்கள் "வட்டாவியா" வை ஆட்சி செய்த போதுதான் (அதாவது இன்றைய இந்தோனேசியாவில் இருக்கின்ற ஜகர்த்தா நகரம்) முஸ்லிம்களுக்கான தனியான சட்ட கோவையை உருவாக்கியிருந்தார்கள். இது 1766 ஆம் ஆண்டு இலங்கையில் ஒல்லாந்து
ஆளுநரான வில்லியம் பெலக் என்பவரால் இலங்கையில் அறிமுகப்படுத்தியதோடு, இங்கிருந்த முஸ்லிம்களுக்கெனத் தனியான சட்டவாக்கம் ஒன்றை உருவாக்கவும் வழி செய்தார்.
இந்த சட்டக் கோவையின் பெயர் "ஸ்பெஷல் லோஸ் றிலேட்டிங் ரூ முஹம்மதியன்ஸ் அன்ட் அத நேட்டிவ் பியுபில்"ஆகும். இது தான் இலங்கை முஸ்லிம்களுக்கு அமைக்கப்பட்ட முதலாவது சட்டக்கோவை என்றழைக்கப்படுகின்றது. இதை சுருக்கமாக முஹம்மதன் கோட்-1803 (Muhammadan code 1803)
என அழைப்பர் .இது ஷாபிஹ் மத்ஹபை அடிப்படையாகக் கொண்டதாகும்.
பின்னர் பிரித்தானியர்கள் இலங்கையை கைப்பற்றிய போது முஸ்லிம்களுக்கான தனியார் சட்டத்தில் எந்த மாற்றங்களையும் கொண்டு வரவில்லை. இவர்களும் முஸ்லிம்களுடன் சிநேகபூர்வமான உறவினை பேனி வந்தார்கள். மேலும் இந்த சட்டங்களில் ஒரு சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் எனும் நோக்கில் 1926 ஆம் ஆண்டு சட்டவாக்க குழுவிலிருந்து ஒரு ஆய்வுக் குழு ஒன்றையும் அதற்கான பிரேரணையையும் கோரியிருந்தது. இந்தக் குழுவின் உப சட்டமா அதிபர் எம். டி. அக்பர், எம் எச். எம். அப்துல் காதர், எச். எம். மாக்கான் மாக்கார், டி.பி. ஜாயா ஆகியோர் சேர்ந்த குழுவாகும். இவர்கள் இலங்கையில் முதலாவதாக காதி நீதிமன்றம் உருவாக்கப்பட வேண்டும் எனும் பிரேரணையை முன் வைத்தவர்கள். இவை அனைத்தையும் வைத்து 1929 ஆம் ஆண்டு முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம் ஏற்படுத்தப்பட்டு 1934 ஆம் ஆண்டு அமுலில் வந்தது. பின்னர் சுதந்திர இலங்கையின் பாராளுமன்றத்தில் 1951ஆம் ஆண்டு
தற்பொழுது நடைமுறையில் இருக்கும் இலங்கை முஸ்லிம் தனியார் சட்டம் உருவாக்கப்பட்டு 1954 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது.அதற்குப் பிறகு 1975ஆம் ஆண்டு வரை 8 நடைமுறை மாற்றங்களுக்கு மாத்திரமே உட்பட்டது. ஆனால் அடிப்படை சட்டத்தில் எந்த மாற்றமும் நடைபெறவில்லை.
பின்னர் இன்னும் மாற்றங்கள் தேவை என்ற குரல்கள் அவ்வப்போது ஒலித்துக் கொண்ட போது
அரசினால் மாற்றங்களுக்காக 04 வகையான குழுக்கள் அமைக்கப்பட்டு மாற்றங்களுக்கான பிரேரணைகளை முன் வைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வந்தது. இது கியூ.சி. கனகரத்தினம், டாக்டர் எச். எம். இஸட். பாரூக் , டாக்டர் சஹாப்தீன் இறுதியாக நீதிபதி சலீம் மர்ஷுக் ஆகியோரின் தலைமையில் இதுவரைகாலமும் குழுக்கள் அமைக்கப்பட்டு முஸ்லிம் தனியார் சட்டத்தை ஆய்வு செய்து சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்பதற்காக இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டது.
இறுதியாக 2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையின் நீதி மற்றும் சட்ட புனரமைப்பு அமைச்சராக இருந்த மிலிந்த மொராகோட அவர்களினால் சுமார் 16 பேர் கொண்ட ஒரு குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவானது முடிவுக்கு வர 9 வருடங்களுக்கு மேல் காலம் தாமதித்தனர்.
பின்னர் 2018 ஆம் ஆண்டு முஸ்லிம் தனியார் சட்டங்களில் மாற்றம் வேண்டும் என்ற கோஷம் மிகவும் பரவலாக வீரியமடைந்து காணப்பட்டிருந்து. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் தனியார் சட்டத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று அரசினால் உருவாக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி சலீம் மர்ஷுக் தலைமையிலான குழுவானது அப்போது உள்ள நிதி அமைச்சரான தலதா அத்துக்கொரலவிடம் சமர்ப்பித்த அறிக்கையே ஆகும். இந்த அறிக்கையானது ஒரு ஒருபக்கச் சார்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கை என்றும், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஆகியோரின் கருத்துக்களை புறக்கணித்து உருவாக்கப்பட்டது என பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தனியார் சட்டம் என்பது ஆண்டாண்டு காலமாக நாம் பெற்று வந்த அடிப்படை உரிமை இதுவாகும். அவைகளை செப்பனிடுவது மாத்திரமே மிக நீதமான தீர்வாகும். மாறாக நீக்குவது அல்ல எனும் நோக்குடன்
வைத்தியர் மரினா ரிபாய் மற்றும் பல புத்திஜீவிகள், மார்க்க அறிஞர்கள், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், சபாநாயகர் என்பனவர்களுடன் கலந்துரையாடினேன்.
இறுதியாக, நீதியமைச்சர் அத்துகொரல அவர்களை சந்தித்தபோது அவர் எமக்கு அளித்த பதில்கள் எனது முயற்சிக்கு பாரிய நிம்மதியை அளித்திருந்தது.
அதாவது "எமது நாடானது மூவின மக்களின் சமய கலாச்சாரங்களை நெறிப் படுத்தும் நோக்குடன் அவரவர்களுக்கு என்று பிரத்தியோகமான சட்டங்கள் வகுக்கப்பட்ட ஒரு நாடாகும். ஆனால் இதில் எங்களுடைய நிலைப்பாடு என்னவென்றால் தனியாக முஸ்லிம் தனியார் சட்டத்தை மாத்திரம் நீக்க முடியாது.சில மாற்றத்தைக் கொண்டுவர
முயற்சிக்கின்றேன்" என நீதி அமைச்சர் அத்துகொரல அவர்கள் கூறினார்கள். இறுதியாக அறிக்கைக்குழுக்களுக்கிடையிலுள்ள கருத்து வேறுபாடுகளாளும் இதுவும் முடிவுக்கு வந்தது.
தற்பொழுது மீண்டும் அந்தப் பிரச்சினை பேசுபொருளாக மாறியுள்ளது. காதி நீதிமன்றங்கள் மற்றும் பலதாரமணம் ஆகிய சட்டங்களை முற்றாக நீக்குவது என்ற நிதி அமைச்சர் அலி சப்ரி அவர்களினால் தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய அறிக்கை மற்றும் எந்த விதமான குழுக்களையும் நியமிக்காமல் நேரடியாக அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ள அறிக்கை என்பன
பிரதானமான காரணமாக காணப்பட்டிருந்தது.
காதி என்பது இஸ்லாத்தில் மிக மகத்துவமான பொறுப்புமிக்க இஸ்லாமிய ஷரியா சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் நீதிமன்றங்களில் நீதிபதி ஆவார். நாம் இலங்கையில் நடக்கும் ஓர் சிலரின் பிழையான நடவடிக்கைகளைக் கொண்டு அனைத்து காதி எனும் தரத்தினை பிழையாக நினைத்துவிடக்கூடாது. எமது இறைத்தூதர் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் காலத்தில் தொடங்கி, கலிபாக்களின் காலம் முதல், உலகிலேயே விஞ்ஞானம், அரசியல், வைத்தியம், ஆன்மீகம் மற்றும் வானியல் துறைகளின் தலைசிறந்து விளங்கிய ஒட்டோமன் ராஜ்ஜியத்தில் ஆட்சியாளர் கூட "ஒரு முடிவை எடுக்க வேண்டுமென்றால் காதிகளிடம் கேட்டுத்தான் இறுதி முடிவுக்கு வருவார்கள். அந்த அளவுக்கு மிக முக்கியமான அமாநிதமான வரலாற்றுச் சிறப்புமிக்க பதவியாகும்.
இவ்வாறான வரலாற்றினைக் கொண்ட காதி முறைமை ஆனது இலங்கையில் 1924ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இங்கு சேவைகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் மாவட்ட நீதிமன்றத்தை பொறுத்தவரையில் அதிக செலவு மட்டுமல்ல காலதாமதமும் ஏற்படும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எனவே காலகாலமாக நாம் பெற்று பலனடைந்த இச் சட்டத்தை முற்றாக நிற்காமல், சட்டம் மற்றும் ஆன்மீகத் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை நியமித்து செப்பனிட வேண்டும் மாறாக முற்றாக நீக்கி விடாதீர்கள். அது எமது தலையில் நாமே மண்ணை அள்ளி போடுவதற்கு சமமாகும்.ஒவ்வொரு துறைகளிலும் பதவியை துஸ்பிரயோகம் செய்கின்றவர்கள் இருக்கிறார்கள். அதற்கு தீர்வு அதை மொத்தமாக நீக்குவது அல்ல. அதை செப்பனிடுவது அதற்கான நீதமான தீர்வாக அமையும் என்பதை கூறிக்கொள்கிறேன்.
அடுத்ததாக பலதாரமணச் சட்டத்தை எடுத்துக்கொண்டால் "இதில் எந்த மாற்றத்தை திணிப்பதற்கும் நாம் உடன்பட முடியாது ஏனென்றால் இது எமது ஷரியாவுடன் (குர்ஆன்,சுன்னா) சம்மந்தப்பட்ட விடயமாகும். சூரத்துல் நிஷாவின் 3வது ஆயத்திலே பலதாரமணம் சம்பந்தமாக தெளிவாகக் கூறியுள்ளது. அதாவது உகது யுத்தத்தின் போது ஷஹீத் ஆக்கப்பட்டு பெண்களும் குழந்தைகளும் அனாதையாக ஆக்கப்பட்டனர். இவர்களுக்கு மறுவாழ்வு கொடுத்து விதவையாக்கப்பட்ட பெண்களின் வாழ்வில் ஒளியேற்றுவதற்காக இறைவனால் அருளப்பட்ட மறுவாழ்வே பலதாரமணம் ஆகும். எம்மில் அநேகமானவர்கள் பிழையாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். இனி அவர்கள் அனைவரும் தெளிவு பெறுவார்கள் என்று நினைக்கின்றேன்.
மிகவும் சிறந்த உதாரணமாக பிரான்சிய புரட்சிக்குப் பின் பாரிஸ் நகரம் "ரோமன்ஸ் சிட்டி" என்று அழைக்கப்பட்டமையை எடுத்துக்காட்டலாம். ஒரு ஆய்வாளர் அவர்களுடைய ஆய்வு கட்டுரையில்
"பிரான்சில் புரட்சியால் அதிகமான ஆண்கள் கொல்லப்பட்ட போது பெண்கள் தங்களது வாழ்வாதாரத்தை நடத்த தங்களையே விற்று வாழ்க்கையை நடத்த வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டார்கள். அப்போது அங்கு இஸ்லாமிய பலதாரமணச் சட்டம் இருக்குமென்றால் பிரான்ஸ் அன்று அப்படி ஒரு அவல நிலைக்கு தள்ளப்பட்டு இருக்காது என்று அவர் தனது கட்டுரையில் சுட்டிக்காட்டியிருந்தார். இப்படி எத்தனையோ உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
நாம் அனைவரும் எமது உரிமை சம்பந்தப்பட்ட விடயங்களில் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும்.
இலங்கையில் தற்போது உள்ள முஸ்லிம் தனியார் சட்டம் என்பது குர்ஆன் மற்றும் சுன்னாவினை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சட்டம் ஆகும். அதிலும் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தை எடுத்துக் கொண்டால் அதில் உள்ளடக்கப்பட்டவைகள் அனைத்தும் எமது முன்னோர்களின் கற்பனையில் உருவானவை அல்ல. அனேகமானவை இஸ்லாமிய ஷரியாவை அடிப்படையாகக் கொண்டு கோவை ஆக்கப்பட்டவை. ஆனால் அதில் சிலவற்றில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளது என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் அதை செப்பனிடுவது நீதமானதாகும். மாறாக நீக்குவது தீர்வாக அமையாது.
இந்த விடயத்தில் எம் சமூகத்தில் வாழும் அனேகமானவர்கள் உறங்குவது போல் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலர் மட்டுமே இது சம்பந்தமாக தனது கருத்துக்களை முன்வைப்பதை பார்க்கின்றபோது மிகவும் மன வேதனை அளிக்கின்றது. இது எமது அடிப்படை உரிமை சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதை நீங்கள் அனைவரும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். வெள்ளம் வந்ததற்குப் பின் அணை தேவையில்லை.எமது முன்னோர்கள் பல சிரமங்களுக்கும் பல சவால்களுக்கும் மத்தியில் நாம் நேரிய பாதையில் பயணிக்க வேண்டும் என்பதற்காக வித்திட்ட பாதைகளே இவையாகும்.
இனியும் நாம் உறங்கியது போல் மௌனித்து இருக்காமல் எமக்கான வர்த்தமானி அரசினால் மும்மொழிகளிலும் பிரசுரிக்கப்படவுள்ளது. அதில் நாம் அனைவரும் கட்டாயமாக கவனம் செலுத்தப்பட வேண்டும். அதுவே எமது எதிர்காலத்தை தீர்மானிக்கும். அது குர்ஆனையும் சுன்னாவையும் புறக்கணிக்கும் விதமாக இருக்கும் என்றால் நாம் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யலாம் என்பதையும் கூறிக் கொள்கின்றேன். இதுவே எமது அடிப்படை உரிமையாகும்.
கடைசியாக நான் கூறவருவது என்னவென்றால், ஒரு உரிமையை பெற்றுக் கொள்வதும் தக்கவைத்துக் கொள்வதும்தான் மிகவும் சிரமமானது. ஆனால் அதை நீக்குவது மிகவும் எளிது. நாம் அனைவரும் கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைய வேண்டிய தருணம் மட்டுமல்லாது விழிப்படைய வேண்டிய தருணமும் இதுவாகும். நாங்கள் புதிதாக ஒரு உரிமையை கேற்கவில்லை. இருப்பதை தக்க வைத்துக் கொள்வதற்காகவே எம்மால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றோம்.
ஆகவே அனைத்தும் சாதகமாக அமைய வேண்டும் என்பதே எமது பிரார்த்தனையாகும்.

0 comments :
Post a Comment