உள்ளூராட்சி மன்றங்களுக்கிடையிலான போட்டியில் அக்கறைப்பற்று பிரதேச சபை காலிறுதிப் போட்டிக்கு தெரிவானது !



நூருல் ஹுதா உமர்-
லங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்று வரும் விவாதப் போட்டியில் அக்கறைப்பற்று பிரதேச சபை காலிறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் காணப்படும் தமிழ் பேசும் உள்ளுராட்சி மன்றங்களை ஒன்றிணைத்து ஒவ்வொரு சபைகளுக்கும் ஒரு தலைப்பு என்ற அடிப்படையில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ் பேசும் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் ஆளுமை மற்றும் அறிவுத்திறனை விருத்தி செய்வதற்காக இந்த போட்டிகள் நடைபெற்று வருகின்றது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். மேற்படி விவாதப் போட்டியானது இரண்டு சுற்றுக்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில் இரண்டு சுற்றுகளிலும் அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. றாஸிக் தலைமையிலான உறுப்பினர்கள் தங்களது விவாத, அறிவுத்திறனை வெளிக்காட்டி வெற்றி பெற்றுள்ளனர்.

நடைபெற்று வரும் போட்டியில் அம்பாறை மாவட்டம் சார்பில் காலிறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள அக்கறைப்பற்று பிரதேச சபையின் விவாதக் குழுவின் தலைவர் தவிசாளர் எம் ஏ றாசிக், உறுப்பினர்களான ரீ.எம் ஐய்யூப், ஏ ஜி பர்சாத், நஜீப் சபையின் செயலாளர் எல்.எம். இர்பான் ஆகியோருக்கு பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். கோவிட் 19 காரணமாக போட்டிகள் யாவும் சூம் தொழிநுட்ப இணைப்பினுடாக இடம் பெற்று வருகின்றமை குறிப்படத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :