ஆரையம்பதி ஆஸ்பத்திரிக்கு அவுஸ்திரேலியா உயிர்காக்கும் கருவி அன்பளிப்பு!



மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் திரு.கௌரிசங்கரன் பொறுப்பேற்றார்.
வி.ரி.சகாதேவராஜா-
ரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு அவுஸ்திரேலிய தன்னார்வ தொண்டுநிறுவனமொன்று 22லட்சருபா பெறுமதியான உயிர்காக்கும் கருவி ஒன்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

மீள்சக்தி வழங்கக்கூடிய இலகுவாக எடுத்துச்செல்லக்கூடியவாறு வடிவமைக்கப்பட்ட இவ் உயிர்காக்கும்கருவியை( recharging portable ventilator ) அவுஸ்திரேலியன் மருத்துவ உதவி மன்றம்( AUSTRALIAN MEDICAL AID FOUNDATION) அன்பளிப்பாக வழங்கியது.

இவ் வைபவம் ,நேற்று ஆரையம்பதி வைத்தியசாலையில் நடைபெற்றது.
வைத்தியசாலைபொறுப்பதிகாரியும், மாவட்டவைத்திய அதிகாரியுமான வைத்தியகலாநிதி டாக்டர் திருநாவுக்கரசு கௌரிசங்கரன் அக்கருவியை உத்தியோகபூர்வமாகப் பெற்றுக்கொண்டார்.கூடவே வைத்தியஅதிகாரி டாக்டர் அழகையா இளங்குமரனும் வைத்தியசாலை நிருவாகத்தினரும் கலந்துகொண்டனர்.

கொழும்பிலிருந்து இக்கருவியைக் கொணர்ந்த சுகாதார தொழினுட்ப குழுவினர்,இதனை செய்முறைவிளக்கத்தையும் அளித்து மாவட்டவைத்தியஅதிகாரியிடம் கையளித்தனர்.
மிக அவசரமாக செயற்கைச்சுவாசம் தேவைப்படும் நோயாளியை நோயாளர்காவு வண்டியில் கொண்டு செல்வதற்கு மிகவும் பொருத்தமான ஒருகருவி இது.

நீண்டநாள் தேவையாகவிருந்துவந்த இக்கருவியை தமது வைத்தியசாலைக்கு வழங்கி உதவுமாறு மாவட்டவைத்திய அதிகாரி டாக்டர் திருநாவுக்கரசு கௌரிசங்கரன் குறித்த அமைப்பிடம் கோரிக்கை விடுத்து வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :