நீண்ட நாற்களாக கொரோனா தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நாடு பூராகவும் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வறுமைக் கோட்டிற்குள் வாழும் குடும்பங்கள் உணவுக்காக பாரிய நெருக்கடி நிலைமகளை எதிர் கொண்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
இவ்வாறான நிலையில் தலை நகர் கொழும்பில் வீதிகளில் யாசகம் கேட்கும் யாசகர்கள் கடைகள் முழுமையாக மூடப்பட்டுள்ள நிலையில் அவர்கள் வீதிகளிலும், கடைகளின் ஓரங்களிலும் சிலர் பசியோடு அலைந்து திரிவதையும் இன்னும் சிலர் கடைகளுக்கு முன்னால் இருந்து கொண்டும் உறங்கிக் கொண்டும் இருப்பதையும் இன்றும் அவதானிக்க முடிந்தது.
குறிப்பாக வயோதிபர்கள் இந்த நிலைமைகளுக்கு உள்ளாகி இருப்பதுடன் சிறுவர்களும் பசியோடு காணப்படுகின்றனர். அவர்களுடன் வாழும் நாய்களும்கூட அவர்களுடன் பசியோடு உறங்கிக் கொண்டிருப்பதை காண முடிகின்றது.
குறித்த பகுதி பொலிஸார் மற்றும் ஒருசில நல் உள்ளங்கள் உணவுகளை வழங்கினாலும் அது அவர்களுக்கு போதாதுள்ள நிலைமைகளையே கண்டு கொள்ள முடிகின்றது.
0 comments :
Post a Comment