நாட்டில் வேகமாக அதிகரித்துவரும் கொரோனா அலையை கட்டுப்படுத்த அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கம் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு ஐக்கிய காங்கிரஸ் தலைவர் முபாரக் அப்துல் மஜீதின் நெறிப்படுத்தலில் நாட்டின் பல பாகங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கல்குடா தொகுதி அமைப்பாளரும் ஐக்கிய காங்கிரசின் பிரதித்தலைவர்களில் ஒருவருமான சல்மான் வஹ்ஹாப் தலைமையில் ஓட்டமாவடியிலும், கொழும்பு பிரதான இணைப்பாளரும் கட்சியின் உப தவிசாளருமான மௌலவி இன்ஆம் தலைமையில் கொழும்பிலும், வன்னி மாவட்ட இணைப்பாளரும், கட்சியின் தேசிய அமைப்பாளர் சதீக் தலைமையில் மன்னாரிலும், காத்தான்குடி இணைப்பாளர் அன்வர் தலைமையில் காத்தான்குடியிலும், கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சப்வான்தலைமையில் புத்தளத்திலும் வறிய மக்களுக்கு உதவும் முகமாக ஐக்கிய காங்கிரசினால் ஏழைகளுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
வறிய மக்களுக்கு உதவும் முகமாக ஐக்கிய காங்கிரசினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கல்முனை அக்றம் பாம் ஹவுஸினால் வழங்கப்பட்ட நிதி உதவி மூலம் ஏழைகளுக்கான இந்த வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment