கல்முனையில் வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞர் வைத்தியசாலையில் அனுமதி : இளைஞர்களுக்கிடையிலான வாய்தர்க்கத்தின் பிரதிபலிப்பு !



மாளிகைக்காடு நிருபர்-
ல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை மதரஸா வீதியில் இடம்பெற்ற சரமாரியான வாள்வெட்டில் காயமடைந்த கல்முனை இளைஞர் அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது

புதன்கிழமை (22) காலை பயணத்தடை அமுலில் உள்ள காலப்பகுதியில் தன்னுடைய வீட்டுக்கு முன்னால் வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றவர்களை நிறுத்தி வேகமாக வாகனத்தை ஓட்டவேண்டாம் என்று கூறியவர்களுடன் வாய்தர்க்கத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் பின்னர் களைந்து சென்று கூறிய இரு வாள்களுடன் வந்து சரமாரியாக தாக்கியதில் காயமடைந்த 19 வயதான முஹம்மத் ஸபான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக காயமடைந்த ஸபானின் தந்தை ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

போதைப்பொருள் பாவனை அதிகரித்து காணப்படும் கல்முனை பிராந்தியத்தில் இப்படியான சம்பவங்கள் அதிகரித்து வருவதாவது ஆபத்தை உண்டாக்கும். வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த எனது தம்பி சத்தம் கேட்டு வெளியே வந்தபோது மிக நீளமான வாள்களால் தாக்கப்பட்டார். இது தொடர்பில் கல்முனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளோம். எனது தம்பியை தாக்கியவர்களை எங்களுக்கு நன்றாக தெரியும். எங்களின் பிரதேசத்தில் யாரிடம் விசாரித்தாலும் அவர்களின் கொடுமைகளை விளக்குவார்கள் என தாக்கப்பட்ட ஸபானின் சகோதரி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

வீட்டு வாயில் கதவு, கதவு போன்றவற்றில் வெட்டுத்தடயங்கள் உள்ளதையும், இரத்த தடயங்கள் உள்ளதையும் அவதானிக்க முடிவதுடன் காணொளியில் மிக கோபத்துடன் குறித்த இரு இளைஞர்களும் தாக்குதல் நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பிலான மேலதிக விசாரணையை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :