ஒரு நாள் சேவையில் கடவுச் சீட்டுக்களைப் பெறுவோரின் எண்ணிக்கை 1000 லிருந்து 1500 ஆக அதிகரிப்பு



மினுவாங்கொடை நிருபர்-
தினசரி பெறப்படும் கடவுச் சீட்டுக்களின் (Passport) எண்ணிக்கையில்
அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஒரு நாள் சேவையின் கீழ் சேவைகளைப் பெறுவோரின் எண்ணிக்கை 1000 இலிருந்து 1500 ஆக அதிகரித்துள்ளதாக, குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர், ஒரு நாள் சேவையின் கீழான விண்ணப்பங்களின் எண்ணிக்கை 1,500 ஐக் கடந்துள்ளதாகவும், திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்தக் காலப்பகுதியில், சாதாரண சேவையின் கீழ் 11, 242 பேர் கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளதாகவும் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :