உங்களுக்கு இந்த 14



லகின் போக்கையே புரட்டிப்போட்ட ஒரு விடயம் கொரோனா தொற்று மனிதகுலம் அத்தனையும் தனது வாழ்க்கை முறையையே மாற்றம் காண வைத்து விட்ட ஒன்று. தொற்றுக்கு முன்பு, தொற்றின் போது, தொற்றின் பின்னர் என மூன்று கட்டங்களில் வேறுபட்ட சுகாதார நடைமுறைகளை பின்பற்றப்படுகின்றன இருப்பினும் சில சுகாதார நடைமுறைகள் பொதுவாக அனைத்து கட்டங்களிலும் பின்பற்றப்படுகின்றன. முகக்கவசம் அணிவது, கைகளை சவற்காரம் கொண்டு கழுவுதல் 1 மீட்டர் இடைவெளி என பின்பற்றப்படுகின்றன.

அனைவரும் வீட்டை விட்டு வெளியே சுதந்திரமாக நடமாட. விரும்பிய இடங்களுக்கு சென்றுவர, குழந்தைகள் துள்ளிவிழையாடிக் கொண்டிருக்க நீங்களும் உங்கள் குடும்பமும் மாத்திரம் பூட்டிய ஒரு வீட்டுக்குள் அடைபட்டு கிடக்கும் நிலைவரும் போது அந்த 14 நாட்கள் உங்களுக்கு எப்படி இருக்கும் என்று சிந்தித்து பார்க்க வேண்டும். ஒருவர் 1 தொடக்கம் 14 நாட்கள் மட்டுமே தனிமைப்படுத்தலில் இருப்பார். இந்த 14 நாட்களுக்குள் இரண்டு தடவைகள் தொற்று உள்ளதா இல்லையா என்று பரீசோதனை செய்யப்படும் இரண்டு தடவையும் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டால் அவர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவார்.

மாறாக தொற்று இருப்பது உறுதியானால் 1 தொடக்கம் 14 நாட்களுடன் மேலும் ஒரு 10 நாட்கள் தனிமைப்படுத்தலில் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவர். அந்த 10 நாட்களுக்கு பின் அவருக்கு தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டு விடுவிக்கப்படுவார். (24 நாட்களாக இருக்கும்)

இருப்பினும் அவருடைய குடும்பத்தினருகான தனிமைப்படுத்தல் என்பது முடிவடைந்து இருக்காது. ஒருவர் தனிமைப்படுத்தலில் இருக்கும் 1 தொடக்க நாளில் இருந்தே குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலில் தான் இருக்க வேண்டும்.தொற்று இருப்பது உறுதியாகி 10 நாட்கள் சிகிச்சை நிலையம் சென்று தொற்று இல்லை என உறுதியாகிய பின்னர் வீடு திரும்புவார். அவர் வீடு திரும்பிய பின்னர் தான் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்குமான 1 தொடக்கம் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் ஆரம்பிக்கப்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் மொத்தமாக 38 நாட்களுக்கு தொடர்ந்து தனிமைப்படுத்தலில் தான் இருக்க வேண்டும்

அதன் பின்னர் குடும்ப உறுப்பினர்கள் தொற்று உள்ளதா இல்லையா என்று பரீசோதனை செய்யப்பட்டு தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டால் தான் அனைவரும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவார். மாறாக மீண்டும் தொற்று யாருக்காவது இருந்தால் இன்னும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் நீடிக்கும் பின்னர் 53 நாட்களுக்கு தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டுடி வரும்

தனிமைப்படுத்தல் என்பதை ஒரு சிறிய விடயமாக எடுத்துக்கொண்டால் அதைப்போன்ற ஒரு முட்டாள்தனம் இருக்க முடியாது. அது உடல் ரீதியான தாக்கங்களை ஏற்படுத்துவதைவிட உள ரீதியாக அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.14 நாட்கள் என்பது 14 வருடங்களைப் போன்று இருக்கும்

இதுவரைக்கும் குடும்ப உறவில் பின்னிப்பினணந்திருந்த உறவுகள் தனிமைப்படுத்தலில் இருக்கும் போது குடும்ப உறுப்பினர்களிடையே சகஜமாக பேசிப்பழக தயக்கம் காட்டத்தொடங்குவர். சிரித்துப் பேசிய உதடுகள்கூட சிரிப்பை மறைத்துக் கொள்ளும். தேடிவந்து உறவினை வலுப்படுத்திய சொந்தங்கள் கூட அன்று காணமல் போயிருக்கும்.

தனிமைப்படுத்தலுக்கு காரணமானவர் குற்ற உணர்ச்சிக்குள் இருப்பார். அனைவரையும் வீட்டில் இருக்கும்படி செய்துவிட்டேன் என தனக்குள் புழுங்கி கொண்டே இருப்பார். துள்ளித் திரிந்த குழந்தைகள் கூட வீட்டுக்குள் அடைபட்டு இருக்க வேண்டிய நிலைவரும். மங்களகரமான காரியங்களுக்கும் செல்ல முடியாதுஇ ஒரு மனிதனின் வாழ்வில் அவசியம் செய்யக்கூடிய இறுதி அஞ்சலிக்கும் செல்ல முடியாத நிலை ஏற்படலாம்.

கட்டித்தழுவிய உறவுகள் கூட ஒரே வீட்டில் இருந்துகொண்டு ஒதுக்கி வைப்பர். முகத்தை பார்த்து பேசக்கூட விருப்பம் வராது. ஒருவர் மற்றவரை பார்க்கின்ற பார்வை வித்தியாசமாக இருக்கும். மனம் அந்தப் பார்வைக்கு ஆயிரம் அர்த்தங்களைத் தேடும். வாய்திறந்து கேட்கவும் வராது.

தள்ளி நின்று கதையுங்கோ என்றது ஒரு சாதாரண வார்த்தையாக இருக்காது. உயிரையே உருக்கும். குழந்தைகள் இருந்தாலும் ஆசையா ஒரு முத்தம் கூட கொடுக்க முடியாது. ஆசையா தேடி ஓடி வந்து அரவணைக்கும் பிள்ளையைகூட அள்ளி அணைத்துக் கொள்ளவும் முடியாது.

வெளியில் இருந்து ஏதும் உதவிகள் தேவைப்பட்டால் மதிலுக்கு மேலாகவும் கதவின் இடைவெளியாகவும் தான் பெறவேண்டி வரும். வீட்டில் இருப்பவர்கள் தங்களுக்கென்று ஒரு மூலையில் அமர்ந்து கொள்வர். வெளியே குழந்தைகள் விளையாடும் காட்சிகளை நமது பிள்ளை கதவின் ஓட்டைவழியாக பார்க்கும் போது மனம் உடைந்து நொருங்கும்

வீட்டில் கண்ணீருக்கு பஞ்சமே இருக்காது. சமைக்கின்ற சாப்பிடும் வாசனையாக இருக்காது. சாப்பாட்டில் விருப்பமும் இருக்காது. தூக்கம் என்பது தொலைவில் இருக்கும் இதுவரைக்கும் சந்தையை போன்று சத்தமாக இருந்த வீடு மயான அமைதியில் இருக்கும். சத்தம் கேட்காத இருமலும் தும்மலும் வந்து போகும் சத்தம் பெரிதாக வந்தால் வெளியில் இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்று ஒருவித மாயை வரும்.

14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்கும் போது உதவிகளுக்கு வெளியே இருப்பவர்களைத்தான் நம்பி இருக்க வேண்டும். எனக்கு உதவி செய்தால் அவர்களுக்கும் வந்துவிடுமோ என்ற பயம் வரும்

வெளியே என்ன நடக்கிறது என்பதை வீட்டுக்கு வெளியே காதவின் அருகே வந்து ஒட்டுக கேட்கும் பழக்கம் வரும் வெளியில் இருந்து கிசுகிசு என்ற சத்தமும் வரும். அந்த வீட்டுக்கு கிட்ட போகாத என்ற வார்த்தை காதுக்குள் குடைந்துகொண்டே இருக்கும். வீட்டை யாரும் நெருங்கி வரமாட்டார்கள். வீட்டைக் கடந்து போகும் போது மற்றவர்களுக்கு ஒருவித பயம் இருக்கும் ஜயே எனக்கும் வந்துவிடுமோ என்று.

சொந்த பந்தங்களும் மறந்து விடும். மனம் அப்போது கடவுளை மட்டுமே தேடும். வெளியே போனால் போதும் என்று மனம் ஏங்கித்தவிக்கும்.இப்படியே இருப்பதைவிட தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எதிர்மறையான எண்ணங்கள் மனதில் தோன்றத்தொடங்கும்.

அந்த 14 நாட்களை முடிந்தபிறகு முதன்முறையாக வெளியில் வரும் போது உடலைத் தழுவும் காற்றின் மென்மையும்இ சூரிய ஒளியின் வன்மையும் புதிதாக பிறந்ததை போன்ற உணர்வினை கொடுத்திருக்கும். அந்த அளவிற்கு தனிமைப்படுத்தல் ஒருவரின் உள்ளத்தினை ரணப்படுத்தியிருக்கும்.

தனிமைப்படுத்தலுக்கு உள்ளான ஒருவரை அவரது குடும்பத்தினர் ஒருவர் மட்டும் தான் கவனித்து கொள்ள வேண்டும் அவருக்கு உணவினை கொடுப்பது, ஆடைகளை துவைக்கின்ற போது கையுறைகளை பயன்படுத்த வேண்டும் தொற்றால் பாதிக்கப்பட்ட அல்லது தனிமைப்படுத்தலில் இருக்கும் ஒருவரை எந்த வகையிலும் நேரடியாக தொடக்கூடாது. குடும்பமாக வாழ்ந்த ஒருவருக்கு இந்த ஒரு விடயத்தை ஏற்றுக்கொள்வது அல்லது தாங்கிக் கொள்ளவது என்பது இதயத்தை கையால் பிடுங்கி எறிவதை போல இருக்கும்.

இந்த ஒரு இக்கட்டான சூழ்நிலைக்குள் ஆளாகாமல் இருக்க வேண்டுமாக இருந்தால் சுகாதார நடைமுறைகளை உரிய முறையில் கடைப்பிடியுங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்தரம் வெளியில் செல்லுங்கள். தனிமைப்படுத்தலில் இருந்து முடியுமானவரை விலகியிருங்கள். நமது தேசத்தையும் நமது அன்புக்குரியவர்களையும் பாதுகாப்பது எமது கடமையாகும். உங்கள் குடும்பத்திலிருந்தும் சமுகத்திலிருந்நதும் விலகியிருக்க கூடிய காரணங்களை நீங்களாக உருவாக்கி கொள்ளாதீர்கள். பொறுப்புடன் செயல்பட முயற்சி செய்யுங்கள்.


சூரியா (sp)
4 ஆம் வருடம்
ஊடக கற்கைகள்
யாழ்ப்பாண பல்கலைக்கழககம்




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :