ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வு இன்று மிகவும் சிறப்பாக மீராகேணி அஸ்ரப் முதியோர் சங்க அனுசரனையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட முதியோர்கள் அனைவருக்கும் அத்துடன் இந்நிகழ்வில் 3 முதியோர்களுக்கு 5000.00 ரூபாய் கொடுப்பனவும் சமூக சேவை திணைக்களத்தினால் 2 சக்கர நாற்காலியும் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
அன்பளிப்பு பொருட்கள் வழங்கப்பட்டு கெளரவம் அளிக்கப்பட்டது.அத்துடன் சிறுவர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் AC. அகமட் அப்கர் அத்துடன் சமூக சேவை உத்தியோகத்தர் SAC.நஜிமுதீன், முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் voice of Eravur அமைப்பினால் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையிலும் சிறுவர் தின மற்றும் முதியோர் தின நிகழ்வும் நடைபெற்றது என்பது சிறப்பம்சம்
0 comments :
Post a Comment