ஒன்லைன் தொழினுட்பத்தின் ஊடாக நடைபெற்ற மாகாண ஆளுநர்களின் கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த தீர்மானத்திற்கு அமைவாக ஊவா மாகாணத்தில் 200 மாணவர்களுக்குக் குறைவான 434 பாடசாலைகள் எதிர்வரும் 21ஆம் திகதி திறக்கப்படவுள்ள அதேவேளை, அதற்கான நடவடிக்கைகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
திறக்கப்படவுள்ள பாடசாலைகள் அமைந்துள்ள பிரதேசம் மற்றும் வளையத்திற்குப் பொறுப்பான அரசியல் பிரமுகர்கள் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களுக்கு இது குறித்து அறிவிக்கப்படவுள்ள அதேவேளை, அவர்களின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்தாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
மேலும், பிரதேச செயலாளர்கள் மற்றும் அபிவிருத்தி அதிகாரிகளின் உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் அவர்களையும் இணைந்துகொள்ள மாவட்டச் செயலாளர்களுக்கு ஆளுநர் ஆலோசனை வழங்கினார்.
பாடசாலைகளைத் திறக்கும் வேலைத்திட்டங்கள் அனைத்தும் சுகாதார ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை அமைவாக முன்னெடுக்கவும், பாடசாலை போக்குவரத்து வசதிகளை வழங்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆளுநரினால் ஆலோசனை வழங்கப்பட்டது.
அத்துடன் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதால், மாணவர்களின் உள்ளங்களைப் பாடசாலையுடன் இணைக்கும் நோக்கில் முதல் வாரத்தில் பாடத்திற்குப் புறம்பான செயல்பாடுகளில் ஈடுபடச்ச செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், அணைத்து பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசார் ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிமார்கள் கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்வதன் அவசியம் குறித்தும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் அணைத்து மாகாண ஆளுநர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், வலையக் கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட கல்வித் துறையுடன் தொடர்புடைய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment