மலசலகூட வசதி அற்ற 26 குடும்பங்களுக்கான மலசல கூடங்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான நிகழ்வு



ஹஸ்பர் ஏ ஹலீம்-
கிண்ணியா பிரதேச செயலகப்பிரிவில் மலசலகூட வசதி அற்ற 26 குடும்பங்களுக்கான மலசல கூடங்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான நிகழ்வு நேற்று(4) கிண்ணியா பிரதேச செயலகத்தில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான சமன் தர்சன பாண்டிகோராளவின் தலைமையில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்டத்தில் மலசல கூட வசதியற்ற 8000க்கு மேற்பட்ட குடும்பங்கள் இருப்பதாகவும் அரசாங்கம் கட்டம் கட்டமாக மக்களுடைய குறித்த தேவைகளை நிறைவேற்ற முயற்சிக்கின்றது. இருப்பினும் அரசாங்கத்துடன் இணைந்து அரசசார்பற்ற நிறுவனங்களும் மக்களுடைய குறித்த வசதிகளை மேம்படுத்தி கொடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது.
அதிமேதகு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்தி கிராமிய மக்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பல ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. திருகோணமலை மாவட்டத்திலும் இச்செயற்றிட்டங்கள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது இதனுடைய மூல நோக்கமாக காணப்படுகின்றது. மாவட்டத்தினுடைய உற்பத்தி செயற்பாட்டை அதிகரிப்பதன் மூலம் மாவட்டத்திற்கு தேவையான உணவு உற்பத்தியைப் பெற்றுக்கொள்ள முடிவதுடன் மேலதிக உற்பத்தியை ஏனைய மாவட்டங்களுக்கு விநியோகிக்க கூடிய சந்தர்ப்பம் ஏற்படும்.

கொவிட்டுக்கு மத்தியிலும் அரசாங்கம் மக்களுடைய வாழ்வாதார செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கு ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மேற்கொண்டது. நாட்டினுடைய பொருளாதாரத்தை மேம்படுத்த அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் ஆகியோர் அனைவரும் கைகோர்த்து செயற்படல் அர்ப்பணிப்புடன் செயற்படல் வேண்டும். தற்பொழுது தனிமைப்படுத்தல் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் சுகாதார நடைமுறைகளை பேணி செயற்பாடுகளை மேற்கொள்ளல் வேண்டும். இதன் மூலம் நாட்டினுடைய பொருளாதாரத்தை வலுப்படுத்த கூடியதாக அமையும் என்று இதன்போது அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள பல கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மீள் குடியேற்றப்பட்ட மக்கள் வாழும் பிரதேசமாக காணப்படுகின்றது. அந்த பிரதேச மக்களுடைய தேவைகளை நிவர்த்தி செய்ய வேண்டிய தேவைப்பாடு உள்ளது. அரசாங்கம் வழங்கும் உதவிகளுக்கு மேலதிகமாக அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகளை பெற்றுக்கொண்டு மக்களுடைய வாழ்வாதார, உட்கட்டமைப்பு வசதிகளை கிரமமாக நிவர்த்தி செய்து வருவதாக இதன்போது கிண்ணியா பிரதேச செயலாளர் தெரிவித்தார் எம். ஏ.அனஸ் தெரிவித்தார்.

தெரிவு செய்யப்பட்ட வரிய குடும்பங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கும் இதன்போது உலர் உணவுப் பொதிகள் மாவட்ட அரசாங்க அதிபரினால் வழங்கிவைக்கப்பட்டது.
இவ்விரு நிகழ்வுகளுக்குமான அனுசரணையை Serving humanity foundation வழங்கியமை குறிப்பிடத்தக்கது .

இதில் கிண்ணியா உதவி பிரதேச செயலாளர் பாஹிமா,கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் றிஸ்வி, நிறுவன உத்தியோகத்தர்கள் பயனாளிகளும் கலந்துகொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :