தெஹிவளை மீலாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் தொழில் அதிபர் இல்லியாஸ் அப்துல் கரீம் அவர்களின் நன்கொடையில் 4 மாடி கட்டடம் மீலாத்தினத்தில் திறந்து வைப்பு!



அஷ்ரப் ஏ சமட்-
தெஹிவளை காலி வீதி பாலத்தருகில் உள்ள மூர் வீதியில் மீலாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் தொழில் அதிபர் அல் ஹாஜ் இல்லியாஸ் அப்துல் கரீம் அவர்களின் நன்கொடையில் நிர்மாணிக்கப்பட்ட 4 மாடி 16 வகுப்பறைகள் கொண்ட கட்டடம் 19.10.2021ல் திறந்து நன்கொடையாளரினால் திறந்து வைக்கப்பட்டது
தெஹிவளை மீலாத் முஸ்லிம் பாடசாலை கடந்த 40 வருடகாலமாக 24 போ்ச் காணியில் இயங்கி வந்தது.
கொழும்பு மவாட்டத்தில் 24 பேர்ச் காணியில் அமையப் பெற்றுள்ள ஓரே ஓரு பாடசாலை மீலாத் வித்தியாலயமாகும். கல்லுாாி அதிபா் எம்.எஸ்.எம் சுகைர் அவா்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழுவினதும் மிகவும் போராட்டத்துக்கு மத்தியில் இக் காணிக்கான வரைபடம் உறுதிப்பத்திரம் ஆகியனவற்றை சேகரித்து இக் கல்லுாாியில் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றது. இக்கல்லுாாிக்கு மேலும் அபிவிருத்தி செய்வதற்காக மேலும் காணிகள் பாடசாலை வள அபிவிருத்திகள் தேவையாக இருந்து வருகின்றது.
இக் கல்லுாாிக்காக ஈ எம் என். மெலிபன் கம்பனியின் உரிமையாளா் இல்யாஸ் ஹாஜி தனது தந்தை அப்துல் கரீம் ஞாபகாா்த்தமாக இந் நன்கொடையின் வழங்கி கடந்த 3 வருட காலத்திற்குள் 4 மாடிகளை கொண்ட இக்கட்டிடம் நிர்மாணிக்கபபட்டுள்ளது.
289 மாணவ மாணவிகள் தரம் 1 முதல் 11ஆம் வகுப்பு வரை இங்கு கல்வி பயிலுகின்றனா். 22 ஆசிரியா்கள் கல்வி போதிக்கின்றனா். இக் கட்டிடம் நிர்மாணிக்கும் வரை கடந்த 3 வருட காலமாக போதிய வகுப்பறை கட்டிடம் இன்மையால் அருகில் உள்ள மெதடிஸ் கல்லுாாி 6 வகுப்பறைகளைப் பெற்று அங்கு தற்காலிகமாக இப் பாடசாலை இயங்கியது. 6 வகுப்பறையில் 11 வகுப்புக்களை பெரிதும் கஸ்டத்தின் மத்தியில் நடாத்தி வந்தாக கல்லுாாி அதிபா் தெரிவித்தார்.
தற்போதைய அதிபரின் திறமையான நிர்வாகத்தின் கீழ் இம்முறை இங்குள்ள மாணவ மாணவிகள் க.பொ.த.சாதாரண தரத்தில் உயா்தரத்திற்கு நுாறுவீதம் சித்தியடைந்துள்ளாா்கள். இக்கல்லுாாியில் இதுவரை உயா்தரம் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவில்லை. கொள்ளுப்பிட்டியில் இருந்து மொரட்டுவை வரையிலான பிரதேசங்களில் வாழும் முஸ்லிம் ஆண் மாணவா்களுக்கு உள்ள ஒரே ஒரு பாடசாலை தெஹிவளை மீலாத் முஸ்லிம் பாடசாலை மட்டுமே உள்ளன. கடந்த ஜந்து தசாப்தங்களாக கொழும்பு தெற்குப் பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மாணவா்கள் தமிழ் மொழில் மூலமான பாடசாலை அனுமதிக்காக பெரிதும் கஸ்டங்களை எதிா் நோக்கி வருகின்றனா். இதனால் பெரும்பாலான மாணவா்கள் தனியாா் பாடசாலையை நாடுகின்றனா். வசதியற்ற குடும்பங்களது பிள்ளைகளுக்கு போதிய அனுமதியை வளங்குவதற்கும் இப்பாடசாலையில் மேலதிக காணிகள் கொள்முதல் செய்யப்பட்டு பௌதீக வளங்கள் அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும். மேலும் பட்டதாரி ஆசிரியா்கள் மற்றும் உயா்தரம் கலை, வர்த்தகம் தொழில்நுட்பம் போன்ற வகுப்புக்கள் ஆரம்பிக்கப்டல் வேண்டும். என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கல்விக்கு உதவி செய்பவர்கள் என்றும் மரணிப்பதில்லை. கற்பவனாக இரு, கற்றுக் கொடுப்பவனாக இரு, கற்பவனுக்கு உதபுவனாக இரு ஆனால் நான்காவது ஆளாக இராதே -
என்ற அல் குர் ஆன் வசனத்தில் முதன் முதலில் அல்லாஹ்விடமிருந்து உலகிற்கு இறங்கிய முதல் வசனமே ”இக்ரஹ் ” ஓதுவீராக, படிப்பீராக “
அந்த வகையில் கொழும்பில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்குச் சென்றால் அங்கு கட்டங்கள், காணிகளை கல்விக்காக முஸ்லிம் தனவந்தா்களே அமைத்துக் கொடுத்துள்ளாா்கள். மறைந்த சேர் ராசிக் பரீட் அவர்கள் பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிா் கல்லுாாிக்கு காணியை வழங்கியிருக்கின்றாா்கள். கொழும்பு சாகிராக் கல்லுாாிக்குச் சென்றால் அங்கு கொடை வள்ளல்களான எம்.ரி.எச். அப்துல் கபூர், பாபிச்சி மரிக்காா், அறிஞா் சித்திலெப்பை, பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கட்டிடங்கள் ஜஸ்ட்டிஸ் அக்பா் மண்டபம், நளிம் ஹாஜியாா் போன்றோா்கள் நிர்மாணித்துக் கொடுத்துள்ளாா்கள். , அன்மையில் காலம்சென்ற சம்ஸ் ஜெம்ஸ் உரிமையாளா் றிபாய் ஹாஜியார் கொழும்பு களுத்துறை மாவட்டங்களில் உள்ள 15க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு தமது சொந்தப் பணங்களை அன்பளிப்புச் செய்து பல கட்டிடங்கள் நிர்மாணித்துக் கொடுத்துள்ளாா்கள் அங்கு பொறிக்கப்பட்டுள்ள நினைவுக் கற்கள் சான்று பகா்கின்றன.
கொழும்பு மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளில் அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கி நிர்மாணிதத கட்டிடங்கள் ஒரு சிலதையே அங்கு காணக்கூடியதாக உள்ளது.
அந்த வகையில் கொள்ளுப்பிட்டியில் இருந்து மொரட்டுவை பானந்துரை வரைa முஸ்லிம் பாடசாலை என்றால் மீலாத் முஸ்லிம் பாடசாலை ஓன்று மட்டுமே உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :