தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் கம்பஹா மாவட்டத்தில் ரன் பொக்குனுகமவில் உள்ள வீடமைப்புத் திட்டத்தில் மத்திய தர வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 72 வீடுகள் கொண்ட தொடா்மாடி வீடமைப்புத் திட்டமொன்றிக்கான நிர்மாணப்பணிகள் 03.10.2021 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இவ் வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக் கல்லை கிராமிய வீடமைப்பு நிர்மாணத்துறை இராஜாங்க அமைச்சா் இந்திக்க குணவா்த்தனவும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவா் துமிந்த சில்வா மற்றும் கிராமிய வீடமைப்பு அமைச்சின் செயலாளா் ஆகியோா்கள் இணைந்து நாட்டி வைத்தனா். இத் திட்டத்தின் நிர்மாணப்பணிக்காக வீடமைப்பு அமைச்சு 300 மில்லியன் ருபாவை ஒதுக்கியுள்ளது. அத்துடன் நிர்மாணப் பணிகளை அரச பொறியியற் கூட்டுத்தாபாணம் முன்னெடுத்துள்ளது.
0 comments :
Post a Comment