சம்மாந்துறைவலயத்திற்குட்பட்ட நாவிதன்வெளி அன்னமலை தேசிய பாடசாலையில் இம்முறை வெளியான க.பொ.த. சா.தர முடிவுகளின்படி திருநாவுக்கரசு வினூதா என்ற மாணவி 9ஏ சித்திபெற்றுள்ளார் என அதிபர் சீ.பாலசிங்கன் தெரிவித்தார்.
பின்தங்கிய பிரதேசத்திலுள்ள பாடசாலையாயிருந்தும் இங்கு எஸ்.பவித்ரன் ,ரி.அபினேஸ் ,எஸ்.லுக்சன் ஆகியோர் 6ஏ சித்திகளுடன் அடுத்தபடியாக உள்ளனர்.
இங்கு கடந்தாண்டைவிட இவ்வாண்டு அனைத்து பாடங்களிலும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ் ,சமயம் ,புவியியல், தகவல் தொழினுட்பம் ,சித்திரம் ,சுகாதாரக்கல்வி ,மனைப்பொருளியல் ஆகிய 08பாடங்களில் 100வீத சித்தி கிடைக்கப்பெற்றுள்ளது.
9பாடங்களிலும் சித்தியின்மை கிடைக்கப்பெறவில்லை என்றும் 90வீதமானவர்கள் உயாதரத்திற்கு தெரிவுசெய்யப்பட்டு;ள்ளனரென்றும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment