கருப்பு ஆசிரியர் தினமாக பிரகடனம் : ஆசிரியர்கள், அதிபர்கள் கல்முனையில் போராட்டத்தில் குதித்தனர் !



நூருல் ஹுதா உமர்-
ர்வதேச ஆசிரியர் தினமான இன்று (06) கருப்பு ஆசிரியர் தினமாக பிரகடனம் செய்து நாட்டின் 312 கல்வி வலயங்களை மையப்படுத்தி பாரிய எதிர்ப்பு நடவடிக்கையொன்றை இலங்கை ஆசிரியர் சங்கம் இன்று மேற்கொண்டது. இரண்டு பிரதான விடயங்களை முன்னிலைப்படுத்தியே , இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாட்டு பிரச்சினை மற்றும் நாட்டிலுள்ள மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாத்தல் ஆகிய இரண்டு விடயங்களை முன்னிலைப்படுத்தியே கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் அலுவலக முன்றலில் இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக சுலோகங்களை ஏந்தி போராடிய இஸ்லாமிய ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

மேலும் கடந்த இரு வருடங்களாக சிறப்பாக ஆன்லைனில் கற்பித்து நல்ல பெறுபேற்றை பெற்றுக்கொடுள்ளோம். போராட்டம் 86 நாட்கள் கடந்தும் தமது பிரச்சினைக்கு இதுவரை அரசாங்கம் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க முன்வரவில்லை எனவும் பாடசாலைகளை ஆரம்பிக்க வேண்டுமாயின் அரசாங்கம் ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி தீர்வொன்றை பெற்றுத்தருமாறு போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்கள், அதிபர்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :