அக்கரைப்பற்று அனைத்து நிறுவனங்கள் ஒன்றியத்தின் அனர்த்த முகாமைத்துவ சபை முன்னெடுக்கும் கொவிட்-19 நிவாரணம் வழங்கும் செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு அக்கரைப்பற்று அனைத்து நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் எச்.சீ.எம்.லாபீர் தலைமையில் அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி பிரதம அதிதியாக கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட தேவையுடைய பயனாளிகளுக்கு கொவிட்-19 நிவாரணம் வழங்கும் செயற்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.மாநகர முதல்வரின் ஒத்துழைப்பில் அக்கரைப்பற்று மாநகர சபையானது கொவிட்-19 இடர் கால நிவாரணம் வழங்கும் இச்செயற்திட்டத்திற்கு கணிசமான நிதிப் பங்களிப்பினை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் எபெக் அமைப்பு, ஸகாத் நிதியம், தனவந்தர்கள் மற்றும் வர்த்தக பிரமுகர்கள், பிரதேச நலன்விரும்பிகள் உள்ளிட்ட பலரும் இத்திட்டத்தினை வலுப்படுத்த உதவிக்கரம் புரிந்துள்ளனர். இத்திட்டத்தின் ஊடாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேவையுடைய குடும்பங்கள் பயன்பெறவுள்ளனர்.
இந்நிகழ்வின் போது அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. ராசீக், மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர். ஏ.ரீ.எம்.றாபி, அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரீ.எம்.எம்.அன்சார், அனைத்து நிறுவனங்கள் சம்மேளனத்தின் செயலாளர்.எம்.டீ.ஹமீத், நிர்வாகிகள், உலமாக்கள், இராணுவ உயரதிகாரிகள், வர்த்தக பிரமுகர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் உட்பட மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment