நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஏறாவூரில் விசேட பிராத்தனை



சாதிக் அகமட்-
 அகிலங்கள் அனைத்துக்கும் அருளாக இறைவனால் அணுப்பி வைக்கப்பட்ட இறுதி இறைத் தூதர் முஹம்மத் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த நாளை நினைவு கூர்ந்து கொள்ளும் வகையில் இன்று ஏறாவூர் நகரின் மீராகேனி ஜும்மா பள்ளி, வாளியப்பா ஜும்மா பள்ளி, ஹனீஃபா ஜும்மா பள்ளி மற்றும் மீரான் லெப்பை வலிய்யுல்லாஹ், மெளலானா உம்மா கப்ரடி ஆகிய இடங்களில் சுகாதார நடைமுறைகளைப் பேனி வெகு சிறப்பாக இடம் பெற்றுள்ளது.


இந்நிகழ்வில் ஏறாவூர் நகர பிதா மற்றும் உலமாக்கள் சகிதம் ஊரின் முக்கிய பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர். தற்காலத்தில் உலகில் மனித உயிர்களைக் காவு கொள்கின்ற கொறோனா தொற்று அகன்று மனித இனம் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதுடன் நாடு பொருளாதார சுபீட்சம் பெற்று நிம்மதி சந்தோஷமாக வாழவும் பிரார்த்தனை இடம்பெற்றது.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த மெளலவி அல்-ஹாஜ் பஷீர் அஹ்மத் றப்பானி அவர்கள், உலக மக்கள் அனைவருக்கும் நபி நாயகத்தின் பிறந்த தின வாழ்த்துக்களைத் தெவித்துக் கொண்டதோடு, சுகாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நிகழ்வுகள் யாவும் மிகச் சுருக்கமாக இடம் பெற்றதாகவும்

நபிகள் நாயகம் அவர்கள், உயிருள்ள ஒவ்வொரு பொருளும் உரிய முறையில் பாதுகாப்போடு வாழ வேண்டும் என்று வலியுறுத்தியவர். சமாதானம், சகோதரத்துவத்தை வித்திட்டவர். சகல நேரங்களிலும் சுகாதாரத்தோடு வாழ வழி வகுத்தவர் எனக் குறிப்பிட்டார். எனவே, நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளை பின்பற்றி வாழ்ந்தால், உலகில் நிம்மதி சந்தோசம் நிலவும் எனக் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :