கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி குழுக்கூட்டம்



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
ட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் இந்த மாதத்திற்கான அபிவிருத்தி குழுக்கூட்டம் நேற்று (14.10.2021) புதன்கிழமை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் பிரதேச அபிவிருத்தி சம்பந்தமான மீளாய்வு செய்யப்பட்டத்தோடு 2022 ஆம் ஆண்டின் தேசிய வரவு செலவு திட்டத்திற்கான முன் மொழிவுகள் சம்பந்தமாக ஆராயப்பட்டது.
இதற்கான முன்மொழிவுகள் கிராம சேவையாளர் பிரிவுகளில் சமூகமட்ட கூட்டங்கள் என்ற அடிப்படையில் கலந்துரையாடப்பட்டு அவ்வப் பிரதேசங்களுக்கு தேவையான அபிவிருத்தி முன்மொழிவுகள் முன்னுரிமை அடிப்படையில் இனங்காணப்பட்டு இன்றைய அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்ட்து.

இதில் வாழ்வாதாரத்திற்கு பணிரெண்டு இலடசம் , புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள உட்கட்டமைப்பு தேவைகளுக்காக பணிரெண்டுஇலட்சம், சூழல் அபிவிருத்திக்கு மூன்று இலட்சம், சமூக நல வேலைத்திட்டத்திற்கு மூன்று இலட்சம் என முன்மொழிவு தயாரிக்கப்பட்டுள்ளதுடன் இதில் ஒவ்வொரு துறைசார்பாகவும் குறித்த விடயங்கள் ஆராயப்பட்டடு அதற்கான அங்கீகாரங்களும் வழங்கப்பட்டன.

இக் கூட்டம் கொவிட் 19 காரணமாக மிகவும் இறுக்கமான நிலையில் சுகாதார முறைப்படி நடைபெற்றது.

அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச். முஸம்மில், உதவி பிரதேச செயலாளர் திருமதி ஏ.றமீசா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்;. றுவைத், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பு செயலாளர் ஏ.ஏ.நாசர், ஏறாவூர் நகர சபை முன்னாள் தவிசாளர் எம்.எல். தஸ்லீம், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் நிறுவனங்களின் தலைவர்கள், ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :