சிறுபான்மை முஸ்லிம்கள் சமூகத்தை தாங்கி பாதுகாக்க கூடிய தலைவர்களை உருவாக்காவிட்டால் சமூகம் பின்னோக்கி செல்ல நேரிடும் .எர் முஸம்மில் மொஹிதீன்



எப்.முபாரக்-
திர்வருகின் காலங்களில் சிறுபான்மை முஸ்லிம்கள் சமூகத்தை தாங்கி பாதுகாக்க கூடிய தலைவர்களை உருவாக்காவிட்டால் சமூகம் பாலடைந்து மேலும் பின்னோக்கி செல்ல நேரிடும் என தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் தலைவர் முஸம்மில் மொஹிதீன் தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதி தொடர்பாக செவ்வாய்க்கிழமை(5) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்:

இந்த அரசின் முழு நோக்கமும் முஸ்லிம்களை பேரளவில் வெறும் பதர்களாக வைத்திருப்பதே,ஒரு காலம் வரும் முஸ்லிம் மக்களுக்கு தனி பள்ளிவாயல்கள் தேவை இல்லை பொதுவான வனக்கஸ்தலம் அமைத்து அதில் எல்லா இனமும் வணங்க முடியும் என்ற முடிவுக்கும் தீர்வு கொடுக்கும் மர்ஜான்கள் உருவாகிவிடுவார்கள்.
நாம் நாமாகவே பரிபோகின்றோம் என்பதை முஸ்லிம் சமூகம் உணர தவருகிறது. இதற்காக முஸ்லிம்கள் சிந்தித்து அரசியல் தலைமைகளை சிறந்த ஆளுமைமிக்க குரல் கொடுக்கக்கூடிய தலைவர்களை உருவாக்க நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம் என்பதை நான் அச்சமின்றி தெரிவிக்கின்றேன்.
அரசாங்கம் குரல் வெளியில் வெளிவராத தலைவர்களையே தம்வசம் வைத்துள்ளது,குரலை நீட்டினால் அடைத்து விடுவார்கள்,அரசாங்கம் கூடியவிரைவில் கவில வேண்டிய காலம் தொலைவில் இல்லை என்றார்.
எனவே அனைத்து சமூகமும் ஒன்று பட்டு செயற்பட வேண்டும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :