சம்மாந்துரையில் அரசுக்கு எதிராக ஜே. வி.பியினர் போராட்டம்.



நூருள் ஹுதா உமர்-
கில இலங்கை விவசாயிகள் சம்மேளன ஏற்பாட்டில் சம்மாந்துறை ஹிஜ்றா சந்தியில் அரசிக்கெதிரான கவன ஈர்ப்புப் போராட்டம் நேற்று காலை மக்கள் விடுதலை முன்னணியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் ஏ.எஸ்.எம். புஹாரி மற்றும் சம்மாந்துறை அகில இலங்கை விவசாயிகள் அமைப்பின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளருமான வை.பி.எம் நபாஸ் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

விவசாயிகளுக்கான உரம் , கிருமிநாசினி கோருவதுடன் விவசாயக் காணிகள் அபகரிப்பிற்கு எதிராகவும் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றத்துடன் அரசின் போக்குகளை கண்டித்த கோஷங்களும் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அம்பாரை மாவட்ட அகில இலங்கை விவசாயிகள் அமைப்பின் தலைவரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான வசந்த பியதிஸ்ஸ, இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அப்னான், சம்மாந்துறைப் பிரதேச விவசாய அமைப்புக்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :