நுவரெலியா நகரில் அதிபர்,ஆசிரியர்கள் போராட்டம்



தலவாக்கலை பி.கேதீஸ்-
சிரியர் விடுதலை முன்னணி ஏனைய ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் இணைந்து நாளை மறுதினம் 6.10.2021 புதன்கிழமை காலை நுவரெலியா மாநகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தவுள்ளதாக ஆசிரியர் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் என்.டி.எஸ்.நாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில் நாடளாவிய ரீதியில் அதிபர்,ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்விசார் ஊழியர்களும் கல்விசாரா ஊழியர்களும் சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுத் தருமாறு கடந்த 24 வருடங்களாக கோரி வருகின்றனர். ஆனால் அதிபர்,ஆசிரியர்களின் போராட்டங்களின் நியாயப்பாடுகளை முழுமையாக விளங்கிக்கொண்டும் அரசு தொடர்ந்து இழுத்தடிப்புச் செய்து வருகின்றது. சம்பள முரண்பாட்டுக்கான தீர்வை அரசாங்கம் இதுவரை வழங்கவில்லை. ஆகவே எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரியே ஆசிரியர் தினத்தில் இந்த போராட்டத்தை முன்னெடுக்கின்றோம். இது அரசுக்கோ, அரசியல்வாதிகளுக்கோ எதிரான போராட்டம் அல்ல. அதிபர்,ஆசிரியர்களின் போராட்டத்திற்கு நியாயமான தீர்வை வழங்ககோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. கொவிட் 19 கொரோனா தொற்றின் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நுவரெலியா நகர மத்தியில் மிகவும் அமைதியான முறையில் நடைபெறும். மேலும் அன்றைய தினம் வலப்பனை,கொத்மலை,அட்டன் உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :