இடர்வரு நிலையிலுள்ள சிறுவர்களுக்கு பாடசாலைக்குள் கல்விக்கான வள இருப்புக்களைப் பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு !



மாளிகைக்காடு நிருபர்-
ல்வி அமைச்சின் சுற்றுநிருபத்திற்கமைவாக தரம் 06 முதல் உயர்தர வகுப்புக்களைக் கொண்ட அனைத்து பாடசாலைகளிலும் பாடசாலை சிறுவர் பாதுகாப்புக் குழுக்களைத் தாபித்தல் மற்றும் வலுவூட்டுதல் - 2021 நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அனுசரணையுடன் இடர்வரு நிலையிலுள்ள சிறுவர்களுக்கு பாடசாலைக்குள் கல்விக்கான வள இருப்புக்களைப் பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (15) பொத்துவில் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் செல்வி.T.திவ்வியாவின் ஏற்பாட்டில் உதவி பிரதேச செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயிலின் தலைமையில் பொத்துவில் கல்வி வலயம் மற்றும் திருக்கோவில் கல்வி வலயங்களுக்குட்பட்ட 05பாடசாலைகளின் பங்குபற்றுதலுடன் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் பொத்துவில் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.சுபையிர், அக்கரைப்பற்று வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி ஹனிபா இஸ்மாயில், திருக்கோவில் கோட்ட பிரதி கல்விப் பணிப்பாளர் கே. கங்காதரன், ஆசிரிய ஆலோசகர் எம்.எஸ்.முபாரக் மற்றும் 05 பாடசாலைகளின் அதிபர்கள், பாடசாலை மாணவர் ஆலோசனைப் பணிக்காக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :