உலக சிறுவர் தினம் இன்றாகும். 1954ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 14ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக உலக சிறுவர் தினம் கொண்டாடப்படுகின்றது. இலங்கை உட்பட சில நாடுகள் ஒக்டோபர் முதலாம் திகதி சிறுவர் தினத்தைக்
கொண்டாடுகின்றன. சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாத்து அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்தும் நோக்கில் சிறுவர் தினம் கொண்டாடப்படுகின்றது.
அத்துடன் இன்று உலக முதியோர் தினமும் கொண்டாடப்படுகிறது.
1990ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 14ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகவே இந்தத் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதியோர்களாக கருதப்படுகின்றனர்.
0 comments :
Post a Comment