நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினால் நாடு தழுவிய ரீதியில் “பட்டினி அற்ற மரங்கள் நிறைந்த தார்மீக நாடு ஒன்றை கட்டியெழுப்புவோம்” என்ற நிகழ்ச்சித்திட்டத்தில் சர்வதேச சிறுவர்தினம் இன்று (01.10.2021) கொண்டாடப்படுகின்றது.
அந்த வகையில் ஓட்டமாவடி பிரதேச செயலக சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி எம்.எச்.சபூஸ் பேகத்தின் வழிகாட்டலில் சர்வதேச சிறுவர்தின நிகழ்வு இன்று (01.10.2021) வெள்ளிக்கிழமை “அனைத்திற்கும் முன்னுரிமையான குழந்தைகள்”; எனும் தொனிப்பொருளில் மாஞ்சோலை பதுரியாநகர் அல்மினா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.
மாஞ்சோலை தாருல் இன்ஸா சிறுவர் கழகத்தின் ஏற்பாட்டில் வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம்.உபைத் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ்.எம்.அல் அமீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர் என பலரும் கலந்து கொண்டனர்.
பாடசாலை மாணவர்களுக்கு பலா மர கன்றுகள் வழங்கப்பட்டதுடன் பாடசாலை வளகத்தில் அதிதிகள் மற்றும் மாணவர்களால் பலா மர கன்றுகளும் நடப்பட்டதுடன் பிரதேச பாடசாலைகள் அரச திணைக்களங்களுக்கும் பலா மரக்கன்றுகள் வழங்கப்பட்டதுடன் மாணவர்களது கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.
0 comments :
Post a Comment